இஸ்லாம் படிப்பிக்கக்கூடிய மௌலவி ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு
(ஜென்நதுல் ஜூமீரா)
கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள,தமிழ் ,கிறிஸ்தவ பாட சாலைகளில் பல முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். எனினும் அப்பாடசாலைகளுக்கு இஸ்லாம் படிப்பிக்கக் கூடிய மௌலவி ஆசிரியர்களை நியமிப்பதில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் போடுபோக்குடன் செயல்படுவதாக மாணவர்களின் பெற்றோர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி வலயத்தில் இந்த நிலை அதிகமாக காணப்படுகின்றது. கல்முனை கல்வி வலயத்தில் உள்ள உவெஸ்லி உயர் தர பாடசாலை, கார்மேல் பற்றிமா தேசிய பாட சாலைகளில் பெரும்பாலான முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர் ஆனாலும் அவர்களுக்கு இஸ்லாம் பாடம் போதிக்கப்படுவதில் அசமந்தம் காட்டப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக பெற்றோர்கள் குறித்த பாடசாலைகளின் அதிபர்களிடம் கேட்ட போது மௌலவி ஆசிரியர்களை நியமிப்பதாலோ அல்லது இஸ்லாம் பாடம் கற்பிபதாலோ எமக்கு எந்தவொரு குறையும் இல்லை. இஸ்லாம் பாடம் புகட்டகூடிய ஆசிரியர்கள் நியமிக்கப் படாமைதான் குறையாக உள்ளது.என அவர்கள் கூறுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம். ஹாசீம் இடம் கேட்ட போது, கல்முனை கல்வி வலயத்தில் மௌலவி ஆசிரியர் தட்டுப்பாடாக உள்ளது எனவும் பயிற்றப்பட்ட ஆசிரியர்களின் உதவியுடன் இக்குறையை நிவர்த்தி செய்வதாகவும் குறிப்பிட்டார். எனினும் குறித்த பாட சாலைகளில் இஸ்லாம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை என்றே மாணவர்களும் பெற்றோர்களு கூறுகின்றனர் .
கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ .நிசாம் முன்னர் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக இருந்தவர் அவருக்கு கல்முனையில் உள்ள அத்தனை நடவடிக்கையும் அக்குவேறு ஆணிவேராக தெரிந்தவர். எனவே எங்களது பிள்ளைகளது இஸ்லாம் பாட கல்விக்கு குறித்த பாடசாலைகளுக்கு மௌலவி ஆசிரியர்களை நியமித்து குறைகளை போக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment