Header Ads



திருகோணமலை மாவட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை

(ஏ.எல்.ஜுனைதீன்)

    திருகோணமலை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 1 இலட்சத்து 59 ஆயிரத்து 251 இஸ்லாமியர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இம்மாவட்டத்தின் பிரதேச செயலக ரீதியாக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு,

பிரதேச செயலகம்





இஸ்லாமியர்களின் எண்ணிக்கை
கிண்ணியா
62165  பேர்
மூதுர்
34999  பேர்
குச்சவெளி
21330  பேர்
தம்பலகாமம்
16193  பேர்
திருகோணமலை நகரமும் சூழலும்
13220  பேர்
கந்தளாய்
 7596  பேர்
சேருவில
 2428  பேர்
மொறவெவ
 1307  பேர்
வெருகல்
   10  பேர்
பதவிசிறிபுர
   02  பேர்
கோமரன்கடவல
   01  பேர்


  
    திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 3 இலட்சத்து 78 ஆயிரத்து 182 பேர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் 1 இலட்சத்து 59 ஆயிரத்து 251 பேர் இஸ்லாமியர்களாகவும் 98 ஆயிரத்து 772 பேர் பெளத்தர்களாகவும் 98 ஆயிரத்து 133 பேர் இந்துக்களாகவும் 14 ஆயிரத்து 795 பேர் ரோமன் கத்தோலிக்கர்களாகவும் 7 ஆயிரத்து 97 பேர் எனைய கிறிஸ்த்தவர்களாகவும் 134 பேர் எனைய சமயங்களைச் சேர்ந்தவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதாக புள்ளி விபரத் திணைக்களம் மேலும் தகவல் வெளியிட்டிருக்கிறது.

2 comments:

  1. தகவலுக்கு ஜஸாகல்லாஹ் கைரா, இப்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் இஸ்லாமியர் எண்ணிக்கைகளை கட்டுரைகளாக பதியப்பட்டால் எங்களை குறித்து எங்களுக்கு தெளிவை ஏற்படுத்திகொள்ள உதவும்.

    ReplyDelete
  2. தயவு செய்து ஒவ்வொரு இஸ்லாமியரும் 6 பிள்ளைகளையாவது பெற்றெடுத்துக்கொளுங்கள். ஏனநென்றால் 15 வருடத்திற்கு முன் கேள்வி பட்டேன் முஸ்லிம்களின் சனதொகை 2500000 இலட்சம் என்று ஆனால் இப்பொழுது 2000000 இலட்சத்தையும் தாண்டவில்லை

    ReplyDelete

Powered by Blogger.