கல்முனை அல்-மிஸ்பாஹ் வித்தியாலயத்தில் தொடுவானம்..!
(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை அல்- மிஸ்பாஹ் வித்தியாலயத்தில் தொடுவானம் என்ற தொனிப்பொருளிலமைந்த க.பொ.த. உ.த. தின நிகழ்வுகள் பகுதித்தலைவர் மௌலவி எம்.ஏ.எம். அறுாஸ் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்துவத்திற்கான தேசிய பணிப்பாளரும், அம்பாரை மாவட்ட பொருளாளருமான ஏ.சி. யஹியாகான் கலந்துகொண்டதுடன், கௌரவ அதிதியாக கல்முனை ஏ.எல்.எம். நாஸர் மற்றும் விசேட அதிதியாக கல்முனை வலயக்கல்வி பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார் உட்பட பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம். பரீட், பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் ஒவ்வொரு வருடமும் உ.தர மாணவர்களால் வெளியிடப்படும் மரகதம் சஞ்சிகையின் 3வது இதழும் வெளியிடப்பட்டது. அத்துடன், இப்பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம், கல்விக்கல்லுாரிகளுக்கு தெரிவு
செய்யப்பட்ட மாணவர்களையும், கடந்த கடந்த ஆண்டு க.பொ.த. சாதாரண தர
பரீட்சையில் ( 9ஏ, 8ஏ 1வி ) ஆகிய பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களும்
பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.
பிரதம அதிதியால் பரீட்சையில் செித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெறும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா 25 ஆயிரம் ரூபா வீதம் வழங்குவேன் என வாக்குறுதியளித்தார்.
அதுபோல் கௌரவ அதிதி ஏ.எல்.எம். நாஸர் அம்மாணவர்களுக்கு வங்கிக்கணக்குகளை ஆரம்பித்து பணத்தினையும் வைப்பிலிட்டு வழங்கிவைத்தார். இங்கு இஸ்லாமிய வரம்புக்குட்பட்ட வகையிலான மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது விசேட அம்சமாகும்.


Post a Comment