காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா இன்று வியாழக்கிழமை காலை காத்தான்குடி அல்ஹிறா மஹா வித்தியாலய பிரதான மண்டபத்தில் வித்தியாலய அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலை அதிபர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,பாடசாலை ஆசிரியார்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது 2013 வருடாந்த பரிசளிப்பு விழா இடம்பெற்றதுடன் குறித்த பாடசாலை ஆயிரம் பாடசாலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டிருப்பதால் மஹிந்தோதய ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் நட்டி வைக்கப்பட்டது.குறித்த பாடசாலையில் இதுவரை காலமும் சிறப்பாக கடமையாற்றிய அதிபர்கள் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.



இவ்விழாவுக்கு முதல் நாளான புதன்கிழமை இரவு காத்தான்குடி கோட்டக்கல்விக் காரியாலயம் இரவோடிரவாக உடைத்து தரைமட்டமாக்கப்பட்டதுடன் அவ்வலுவலகத்தில் இருந்த பல மில்லியன் பெறுமதியான உபகரணங்களும் பல ட்ரக்டர்களில் விடிய விடிய அள்ளிச் செல்லப்பட்ட அவலம் எந்த ஊடகங்களிலும் வெளிப்படுத்தப்படவில்லை. அச்சம்பவம் பற்றி ஏதும் அறியாமல்தான் இங்கு மறுநாள் இந்த விழா கொண்டாடப்பட்டதோ...?
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-