அட்டாளைச்சேனை கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கலை கலாசாரப் போட்டி
(ரீ.கே.றஹ்மத்துல்லா)
எதிர்வரும் புனித நோன்பினை முன்னிட்டு அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகம் அட்டாளைச்சேனை கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கலை கலாசாரப் போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்hகன பரிசளிப்பு விழாவை எதிர்வரும் ஐந்தாம் திகதி அட்டாளைச்சேனை பிரதான வீதிக்கருகாமையில் அமைந்துள்ள லாசார மண்டப வளாகத்தில் மிகவும் பிரபல்லியமிக்க உலாமக்களின் மார்க்க சொற்பொழிவுடன் நடத்தவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக கழகத்தின் தலைவர் எம்.ஜே. அன்வர் நௌசாத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகம் விளையாட்டுத்துறையில் தேசியரீதியில் பலசாதனைகளைப்படைத்து வருவது மட்டுமல்லாது சமூகரீதியான பல வேலைத்திட்டங்களையும் மேற்கொண்டு அதில் வரவேற்பையும் பெற்றுவருவது எமது கழகத்திற்கு கிடைத்துவரும் பெருமையாகும்.
அந்த வகையில் எமது கழகம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பலவீரர்களையும், நல்லொழுக்கமுள்ள நற்பிரஜைகளையும் உருவாக்குவதற்கு களமமைத்து வருவது மட்டுமல்லாது அதன் மூலமாக உயர் தொழில்வாய்ப்பு பெற்று நல்ல நிலைகளில் இருந்து வருவதும் கழகத்திற்கு மட்டுமல்லாது இப்பிரதேசத்திற்கும் பெருமை தேடிக் கெடுக்கும் விடயமாகவே காணப்படுகின்றது.
மேலும் எமது கழகம் எதிர்வரும் க.பொ.த.உயரர்தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் நலன் கருதி இலவச கருத்தரங்கினையும் நடத்தவுள்ளதுடன், மின்னொளி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்றனையும் மிகவும் பிரமாண்டமான முறையில் நடாத்தி இறுதிப் போட்டியினை எதிர்வரும் நோன்புப் பெருநாள் மறுதினம் நடத்துவதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்றுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment