காத்தான்குடி நகரசபை அமர்வை பார்வையிட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
கடந்த சில மாதங்களாக காத்தான்குடி நகர சபையில் இடம்பெறும் சபை அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் அழைக்கப்படாமல் இருந்து வந்தனர்.
ஆனால் அண்மையில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில் காத்தான்குடி நகரசபையின் சபை அமர்வுகளை பார்வையிடுவதற்கு ஊடகவியலாளர்களை அனுமதிப்பதெனவும் ,அழைப்பதெனவும் நகர சபையின் மாதாந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்த கருத்துக்கிணங்க 10திகதி இன்று பி.பகல் காத்தான்குடி நகர சபையில் இடம்பெற்ற அவசர சபை அமர்வில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பிராந்திய ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அண்மையில் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் காத்தான்குடி நகரசபையில் வெளிப்படத்தன்மை பேணுமாறும் நகரசபை அமர்வுகளை பார்வையிட ஊடகவியலாளர்களை அனுமதிக்குமாறும் கோரி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்னாள் கவனஈர்ப்பு போராட்டமொன்றை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.


இனியாவது இந்த நகர சபைக் கூட்டங்களுக்குச் செல்லும் ஊடகவியலாளார்கள் அங்கு நடைபெறும் நிகழ்வுகளையும், உரைகளையும் வரியிறுப்பாளர்களுக்கு பக்கச்சார்பின்றி வெளிப்படுத்துவார்களா? அல்லது தவிசாளரும், உறுப்பினர்களும் உரையாற்றுவதை மாத்திரம் படம்பிடித்து ஊடகங்களில் பிரசுரிப்பதுடன் தங்களின் கடமை முடிந்து விட்டதாகக் கருதுவார்களா?
ReplyDeleteஊடகவியலாளர்களை அனுமதிப்பதன் மூலமே சபை நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கவன ஈர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டு பிரதேச ஊடகவியலாளர்களுக்குப் பெற்றுக் கொடுத்துள்ள இந்த உரிமையை ஊடகவியலாளர்கள் பொறுப்புடன் பேணுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.
ஆமாம்.. இன்று நடைபெற்ற இந்த அவசரக் கூட்டத்தில் என்ன நடைபெற்றது? எப்போது இன்றைய சபை அமர்வின் அவதானிப்புத் தொகுப்பை கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்துவார்கள்..?
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-