கடல் கொந்தளிப்பு உயிரிழந்தவர்கள் 42 ஆக உயர்வு - கடலில் மிதக்கும் சடலங்கள்
பலபிட்டிய பிரதேசத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 11பேரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் காணாமல் போயிருந்தனர்.
இந்த நிலையில், 31 மீனவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று அறிவித்தது. அத்துடன், மேலும் 29 மீனவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் 31 பேரை தொடர்ந்தும் தேடி வருவதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டிருந்தது.
இவ்வாறு உயிரிழந்த மீனவர்களில் பெரும்பாலானவர்கள் பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 16பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையிலேயே இன்று காலை மேலும் 11பேரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
எனினும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழப்பு 41ஆக அதிகரித்துள்ளது. அஹுங்கல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மாத்திரம் 10 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவற்றில் ஏழு சடலங்கள் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தினை அண்மித்த கடற்கரையில் இன்று இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
இவை தெஹிவளை மற்றும் மொறட்டுவை பகுதியைச் சேர்ந்தவர்களின் சடலங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதேவேளை, மேலும் சில மீனவர்களின் சடலங்கள் கடலில் மிதந்துகொண்டிருப்பதாகவும் அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
மனிதனின் கஸ்டத்தை இட்டு எமக்கும் சங்கடம்தான். ஆனால், இயற்கை இவ்வளவுக்கு அவசரமாக சொல்லாமல் கொள்ளாமல் திடீரென சீற்றம் கொள்ள காரணம்? அமெரிக்காவில் ஒருகட்டத்தில் சூறாவளியினால் ஆயிரக்கணக்கில் உயிர்ச்சேதம் நடந்தது? ஏன்? இந்தொனேசியாவின் அந்த குறிப்பிட்ட பாலிதீவின் அந்த உல்லாசஹோட்டலை மையாமாககொன்டு சுனாமி அழித்ததே ஏன்?காலி உணவடுண கடற்கரை ஹோட்டல்கள் அப்படியே அழிந்தனவே ஏன்? அவ்வளவு அனாச்சாரம், அக்கிரமம், இந்த பொ.ப.சே. வந்தபின் யாருடைய இறைவனாக இருக்கட்டும், கடவுளுக்கு பொம்மை கட்டி தீயிட்டு கொளுத்திய அக்கிரமக்காரர்கள் உள்ள நாடு இது. அவனின் தன்டன்னை எந்த ரூபத்தில் வரும் என்று கட்பனைகூடப்பண்ணிப்பார்த்திருக்க மாட்டார்கள். யாருமே எதிர்பாக்கவில்லை. 40 க்கும் மேற்பட்ட சடலம் மீட்பு. இன்னும் மிதகின்றனவாம். சிலர் இன்னும் இல்லை. கொழும்பு தொடக்கம் காலி வரை சோக மயம். அதற்குள் பதுளையில் அட்டகாசம். கடவுளின் தீர்ப்பு அவ்வளவுக்கு தாமதிக்காது. Lets pray for good
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete