Header Ads



அரச வேலை வாய்ப்புகளுக்காக யாழ்,கிளிநொச்சி முஸ்லிம்களிடம் விண்ணப்பங்கோரல்

அண்மையில் வடமாகாணத்தில் சமுர்த்தி கள உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள், தொண்டர் ஆசிரியர்கள் என பல தரப்பினர்க்கும் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமே. 

குறிப்பாக யாழ்ப்பாணம்,கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 3000 நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 5 முஸ்லிம்கள் மாத்திரமே உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள். வழங்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகளில் 1%மேனும் முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை. 

அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் 30 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கும். மேற்படி விடயத்தை யாழ் முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கான சிவில் சமூக முன்னெடுப்புகள் (CIJMR) வேலைத்திட்டத்தினூடாக அரச உயர் மட்டத்தின் கவனத்திற்கு நாம் கொண்டு வந்திருக்கின்றோம். இதனடிப்படையில் இம்மாதம் ஜூன் 25ம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களை கருத்தில்கொண்டு அவர்களுக்கான வேலை வாய்ப்புகளைப் பெற்றுத்தரப்படும் என்ற உத்தரவாதம் மேல் மட்டத்திலிருந்து எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனடிப்படையில்  பின்வரும் அரச உத்தியோகங்களுக்கான விண்ணப்பங்கள் அவசரமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி முஸ்லிம்களிடம் இருந்து கோரப்படுகின்றது.

·         சமுர்த்தி கள உத்தியோகத்தர்கள்
·         தொண்டர் ஆசிரியர்கள்
·         அரச சிற்றூழியர்கள்

இதனடிப்படையில் விண்ணப்பங்களை உடனடியாக இல.77 கலீபா அப்துல் காதர் வீதி, முஸ்லிம் வட்டாரம், யாழ்ப்பாணம். என்னும் முகவரிக்கு நேரில் அல்லது தபாலில் கிடைக்கச் செய்யவும்.

மேலதிக விபரங்களுக்கு சட்டத்தரணி றமீஸ் – 0777-805399 அஜ்மல் ஆசிரியர்- 0772272742 அல்லது அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப் -0770-525391 ஆகியோருடன் தொடர்பினை ஏற்படுத்தவும்.

குறிப்பு: பொதுவாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் அரச உத்தியோகங்களில் கவனம் செலுத்துவதில்லை, ஆண்கள் வியாபாரத்தில் நாட்டம்கொள்ள, பெண்கள் வீடுகளுக்குள் முடக்கப்படுகின்றார்கள். அரச உத்தியோகம் என்பது சமூக அந்தஸ்த்தை மாத்திரமன்றி பல்வேறு நலன்களையும் பெற்றுத்தரக்கூடியது என்ற சிந்தனை எம்மவர்க்கு இல்லாமலிருக்கின்றது. இது ஒரு சமூகத்தின் ஆபத்தான அழிவை உணர்த்தி நிற்கும் ஒரு அடையாளமாகும் என்பதை கவனத்தில் கொள்க.

No comments

Powered by Blogger.