நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கழகம் நடாத்திய விளையாட்டு போட்டி
(சுலைமான் றாபி)
நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கழகம் நடாத்திய அக்கழகத்தில் அங்கத்துவம் வகிக்கும் 19 வயதிற்குற்பட்ட வீரர்களுக்கிடையில் கரப்பந்து, கபடி மற்றும் கிரிகெட் போட்டிகள் இன்று மதீனா பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின் உதவித்தவிசாளர் எம்.எம்.எம். அன்சார், இளைஞர் சேவை அதிகாரி எம்.ரி.எம். ஹாரூன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடக மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சருமான எஸ்.எம்.ஷாபி, மதீனா இளைஞர் கழகத்தின் தலைவர் எஸ்.எம். இஸ்மத், ஆசிரியர் எல்.எம். பாரிஸ் மற்றும் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வின் இறுதியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு நினைவுப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதேவேளை இவ்விளையாட்டின் மூலம் வீரர்களின் விளையாட்டு மற்றும் பௌதீக வளங்களில் அபிவிருத்தியையும், கழக ஒற்றுமையையும் அபிவிருத்தி செய்ய முடியும் என உதவித்தவிசாளர் எம்.எம்.எம். அன்சார் தெரிவித்தார்.

Post a Comment