Header Ads



காத்தான்குடியில் உலமாக்களுக்குரிய பல்கலைக்கழகத்தை நிறுவாதே - பொதுபல சேனா

(அஸ்ரப். ஏ. சமத்)

பொதுபல சேனவின் கூட்டம் நேற்று (9)  அம்பாறை நகரில் நடைபெற்றிருந்தது. பொது பல சேன செயலாளரின்  ஞான தேரர் உரையின் ஹிரு, தொலைக்காட்சிகளில் நேற்று இரவு 9.30 மணி செய்தியில்   ஒளிபரப்பானது. 

அச்செய்தியில் இருந்து,

காத்தாண்குடியில் அமைக்கும் உலமாக்குரிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினை உடனடியாக அரசு நிறுத்த வேண்டும். இதனை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அம்பாறையில் இருந்து வேண்டுகோள் விடுக்கின்றோம்.  இல்லாவிட்டால் இதற்காக பாரிய ஆர்ப்பாட்டத்தினையும் எதிர்ப்பையும் நாடுபூராவும் நடாத்துவோம்.

இப் பல்கழைக்கழம் காத்தாண்குடியில் அமைந்தால் வஹாபி, சுபி ஊடாக இஸ்லாமிய பயங்கரவாதம் இலங்கையில் உருவாகும். இப்பல்கலைக்கழகம் அமைப்பதையிட்டு எமது எதிர்பபை தெரவிக்கின்றோம்.  இப் பல்கலைக்கழகத்தினால் எமது நாடு பாரிய அச்சுருத்தலை எதிர்நோக்கும். என ஞானதேரர் தெரிவித்திருந்தார்.  

5 comments:

  1. இந்த பொய்மூட்டை என்ன சொல்ல வருகிறான். இவன் சொல்வது எல்லாம் உண்மை என்ற நினைப்பா இவனுக்கு... இவண்ட தொல்லையை தாங்கமுடியல்ல... அரசிக்கு வக்காளத்து வாங்கு பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் என்ன சொல்லப்போகின்றார்...

    ReplyDelete
  2. தேரரே..! இந்த அறபுப் பல்கலைக்கழகம் அமைக்கும் கனவு எமது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் நீண்ட நாள் கனவாகும். நீங்கள் அதைக் கலைக்க முயலாதீர்கள்.

    2011ல் 'உம்முல் குரா' அறபுப் பல்கலைக்கழகம் அமைக்கப் போவதாக அறிவித்தார். அதற்காக காத்தான்குடி பாலமுனையில் 15 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக அன்வர் வித்தியாலயத்தை அதற்காகத் தருமாறும் கேட்டு அலைந்தார்.

    எமது மக்களே அதற்கு இணங்கவில்லை. காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனமும் அவரது அறிவிப்பை குழு நியமித்து பரிசீலித்து விட்டு குப்பையில் போட்டு விட்டது. பாலமுனையில் ஒதுக்கப்பட்ட 15 ஏக்கர் காணிக்கும் என்ன நடந்தது என்பது தெரியாது.

    இப்போது 'மலிக் அப்துல்லா பல்கலைக்கழகம்' என்று ஒரு புதுப் பல்கலைக்கழக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கான நிரந்தரக் கட்டிடம் ரெதிதென்ன எனனும் மஹாவலிக் கிராமத்தில் அமைக்கப்படும் என்றும் அறிவிததிருக்கின்றார்.

    அந்தக் கிராமத்திலும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் சகாக்கள் மாட்டுப்பண்ணை ஒன்றை நடாத்தி வருகின்றார்கள். அங்குதான் இந்தப் பல்கலைக் கழகத்தை அவர் நிரந்தரமாக அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறாரே தவிர காத்தான்குடியில் அதனை அமைப்பதற்கான இடவசதி இல்லை.

    உங்களைப் போலவே மக்களைத் திசை திருப்ப காலத்துக்குக் காலம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா எதையாவது செர்ல்வது வழக்கம். நீங்கள் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. அடடா இது நல்லா இருக்கே சகோதரர் புவி ரஹ்மதுள்ளாஹ் சொல்வதுபோல இவங்களை இப்படி ஏமாத்தலாமே இது நல்ல ஐடியா இதுமாதிரி பலகாரியங்களை செய்து இந்த கூட்டத்தை அலய விடலாமே.

    ReplyDelete
  4. nallolukka kalvikkuku theeviravatha kalvikkum viththiyasam thariyathe kalabola aththo

    ReplyDelete
  5. சஹோதரர்களே நீங்கள் ஹிஸ்புல்லாஹ் வின் மனதை
    தோன்றிப்பார்த்துவிட்டா இப்படியெல்லாம் கதை கூறுகிறீர்கள்.
    நல்லது நடந்தால் அல்ஹம்துலில்லாஹ், இல்லாவிட்டால் இன்னலில்லாஹ்.

    எல்லாத்தையுமே எதிர்மறையாக யோசிக்காமல் உங்களால் முடிந்த
    உதவிகளை செய்துவிட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்..
    இது இஸ்லாத்தின் காலம்

    ReplyDelete

Powered by Blogger.