முஸ்லிம் காங்கிரஸ் பின்னடைந்தாலும் பரவாயில்லை, அதிரடிகள் தொடரும் - ஹசன் அலி
முஸ்லிம் காங்கிரஸ் பின்னடைவு கண்டாலும் பரவாயில்லை, கட்சியை காட்டிக்கொடுக்கும், கட்சி தீர்மானங்களை மதிக்காதவர்கள் மீது அதிரடிகள் தொடருமெனவும் இதற்கு வடமேல் மாகாண சபையில் 13 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த யஹ்யாவும், ஜவகர்ஷாவும் நீக்கப்பட்டதை உதாரணமாக கொள்ள முடியுமெனவும் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸில் காட்டிக்கொடுப்புச் சம்பவங்கள் தாராளமாகவே நடைபெற்றுள்ளன. அக்காலப்பகுதியில் அவ்வாறனவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் போராளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தையே வடமேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர்கள் இருவர் மீறியுள்ளனர். இவர்களுக்கு எதிராக நாம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளோம். கட்சியன் தீர்மானங்களுக்கு கட்டுப்படாத எவர்மீதும் நடவடிக்கை மேற்கொள்வோம். இதனால் கட்சி பின்னடைவு கண்டாலும் பரவாயில்லை. எமக்கு முஸ்லிம் காங்கிரஸின் கட்டுக்கோப்பு பிரதானமானது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
.jpg)
Other members are following leader’s footsteps. Leader also supports the government when he wants to do so. Only difference is that he declares his decision as party decision using his power, others unable to do so.
ReplyDeleteHe receives more benefits than others.
பதவிகளுக்காக கட்சிக்குள் வந்தவர்களுக்கு வேட்பாளர் படியலில் இடம் கொடுத்தீர்கள் உண்மையன கட்சிக்காரனை தள்ளிவைத்தீர்கள் , சுயநலவாதிகள் மூலம் சமுதாயத்திற்கு விடிவு கிடைக்குமா ,
ReplyDeleteENNA....S. NAYAHAM AWARHALE!
ReplyDeleteIPPUDI AAVESAPPRREAL?
KATCHIYILA OLUKKAM MEERI NADANTHA AAKKALUKKU THANDANA KUDUKKANUMDA KASANA PEARHALAI 'KURUNAHALUKKE' KONDU POOI ALLAVA 'adikkanum' SEIVIYALA....? NENJIL URAMUM, NERMAITHIRAMUM,ALLAHDA PAYAMUM IRUKKA?
இதை எப்பவோ உங்களின் கட்சி செய்திருக்க வேண்டும்.
ReplyDeleteபள்ளிவாசலில் வைத்து மக்களின் முன்னிலையில் அழ்ழாஹ்வின்மீது சத்தியம் செய்து வாக்கு மீறிய ஹிஸ்புல்லாவுக்கு எதிராக அன்று உங்களின் கட்சி ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இவ்வாறான அவலங்கள் எல்லாம் தொடர்ந்திருக்காது.
சரி பார்ப்போம். 13வது திருத்தத்திற்கும் உங்களின் கட்சிக்குள்ளிருந்து அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக் கூட்டிக் கொடுக்க திரை மறைவில் முயற்சித்துக் கொண்டிருக்கும் 'பலம்' வாய்ந்தவர்களுக்கும் நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்பதை!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
நல்லம் ரொம்ப ரொம்ப நல்லம்.....எந்த ஒரு அமைப்பிலும் களை எடுப்பு அவசியம்......
ReplyDeleteஅது சரி எனக்கொரு சந்தேகம்......கட்சியை காட்டிகொடுதவர்களை களை எடுக்கும் நீங்கள், நீர் சார்ந்த கட்சி நம் முஸ்லிம் சமூகத்தை ஒட்டு மொத்தமாக ஒவ்வொரு தேர்தலிலும் காட்டி கொடுப்பதற்கும், காட்டி கொடுத்ததற்கும் என்ன தண்டனை ........
வாக்களிக்கும் மக்களின் எதிர்ப்பையும் மீறி இனவாத அரசுடன் சேர்ந்தது, அந்த அரசுடன் இன்னும் ஒட்டிக்கொண்டு இருப்பது.....இதெல்லாம் உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் ஒரு தவறே இல்லையா.....
உண்மைய சொன்ன ....இவர்களை பற்றி தெரிந்தும் மீண்டும் மீண்டும் வாக்களிக்கும் மக்கள் என்னும் மாக்களே இங்கு தண்டிக்கபடவேண்டியவர்கள்.....
this is good job
ReplyDelete