எம்.எச்.முஹம்மதிற்கு வயது 93 - பிரமுகர்கள் வாழ்த்து
(அஸ்ரப் ஏ சமத்)
முன்னாள் சபாநாயகரும் அமைச்சரும் இஸ்லாமிய நிலையத் தலைவருமான எம்.எச்.முஹம்மதின் 93வது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை (13) திகதியாகும். இதனை முண்னிட்டு பொரளையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர்களான றிசாத் பதியுத்தீன், தினேஸ்குணவர்த்தன, நிமல் சிறிபால டி சில்வா, ஏ.எச்.எம்.பௌசி, நளின் திசாநாயக்க, அலவிமௌலானா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் மற்றும் சப்ரகமுகவ பல்கலைக்கழக வேந்தர் ஹிம்புரு வஜ்ஜிர தேரர் தலைiயிலான பௌhத்த குருமார்கள், மற்றும் முப்திமௌலவி, ஹசன் மௌலானா, அருட்சகோதரர் ஹெட்டியாராச்சி ஆகியோர் மற்றும் பலரும் கலந்து அண்னாரை வாழ்த்திச் சென்றனர்.



நடை முறைகளில் சிறந்தது நபியவர்கள் காட்டிச் சென்ற நடைமுறையே. அவைகளை முஸ்லிம்கள் படித்து பின்பற்றுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ReplyDeleteநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''யார் எந்தக் கூட்டத்தினருக்கு ஒப்பாகின்றாரோ அவரும் அக் கூட்டத்தைச் சேர்ந்தவரே'' (அபூ தாவுத்). மனிதர்கள் யாவரும் தவறிழைப்பவர்களே. எனவே இது போன்ற நிகழ்ச்சிகள் யூத கிறித்தவர்களின் நடைமுறைகள் என்பதையும், இது போன்று மாற்றுமதக் கலாச்சாரங்களை முற்றாகத் தவிர்க்கும் படியும் சகலருக்கும் ஞாபகமூட்டுகிறேன். ''ஞாபகமூட்டுவீராக, ஞாபகப்படுத்துவது இறைவிசுவாசிகளுக்கு பயனளிக்கும்'' (அல்குர்ஆன்).
Riyadh ksa,
ReplyDeleteநீங்கள் கூறுவதன்படி பார்த்தால்...
கிறிஸ்துவர்களான ஐரோப்பியரின் வழிவந்த சேர்ட், ட்ரவுசர், கோட் சூட் அணிவதுகூட அவர்களின் கூட்டத்தினருடன் நம்மை ஒப்பாக்கிவிடாதா?
இதுமட்டுமல்ல.. இப்படியே இன்னும் எத்தனையோ பிற மதத்தவர்களின் நடை உடை பாவனை மற்றும் யூத விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையெல்லாம் கூச்சமின்றிப் பின்பற்றுகின்றோமே.. இப்போது என்ன செய்வது..?
சரி, அவற்றையெல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டு நம்முடையது என்று பார்த்தால் நமக்கு என்று எஞ்சியிருக்கும் பேரீச்சம்பழத்தையும் ஒட்டகப்பாலையும் சாப்பிட்டு ஈச்சம்பாயைப் பிறாண்டிக்கொண்டிருக்க வேண்டியதுதானா அன்பரே...?