Header Ads



4 அமைச்சர்கள் அடிக்கல் வைத்தும் பயன் இல்லை - கல்முனையில் அவலம்..!


(எம்.எம்.ஜெஸ்மின் + ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கிழக்கு மாகாணத்தின் முக்கிய மாநகரசபைகளில் ஒன்றாக திகழ்வதுதான் கல்முனை மாநகரசபை. இதன் கீழ் பராமரிக்கப்படும் சந்தாங்கேணி பொதுவிளையாட்டு மைதானம் எவ்வித அபிவிருத்தியும் இன்றி காணப்படுகின்றது.

இன்று இதன் அவநிலை பற்றி பலராலும் சுட்டிக் காட்டப்பட்ட நிலையில் இங்கு நிரந்தரக் காவலாளி ஒருவர் இல்லை, மாடுகள் புற்கள் மேயும் இடமாகவும், வெளிப்பிரதேசங்களிலிருந்து கல்முனை தனியார் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் இம் மைதானத்தை திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் இடமாகவும் பாவிப்பதுடன் மைதானத்திற்கு தெற்கே இருக்கும் வீட்டு உரிமையாளர்கள் இந்த மைதானத்தை குறுக்கு வீதியாகவும் பயன்படுத்துகின்;றனர். அத்துடன் இம்மைதானத்தின் பிரதான இரு நுழைவாயல் கதவுகள் இன்;றிக் காணப்படுவதுடன் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட சிறிய பார்வையாளர் அரங்கும் பலவருடங்களாக  சேதமடைந்து காணப்படுகின்றது. இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி நிலையத்தின் கதவுகளும் உடைக்கப்பட்டு சூரையாடப்பட்டுள்ளது. இக்கட்டிடம் எந்தவிதமான தேவைகளுக்கும் பாவிக்க முடியாதுள்ளது.

இம்மைதானத்தை 12 கடின பந்து கிரிக்கட் கழகங்களும், 03 உதைபந்தாட்டக் கழகங்களும் நாளாந்தம் பயன்படுத்துவதுடன் கலாசார நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. ஆனால் எவ்வித அடிப்படைவசதிகளுமின்றி பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். 

இது இவ்வாறிருக்க இம்மைதானத்திற்கு 4 அமைச்சர்கள் மைதான அபிவிருத்தி சம்மந்தமான அடிக்கல்களை நாட்டியுள்ளனர். கடந்த 05 மாதங்களுக்கு முன்னும் கல்முனை மாநாகர முதல்வர் அவர்களால் மலசல கூடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட போதிலும் எவ்வித நிர்மாணப்பணிகளும் நடைபெறவில்லை.

முன்னாள் அமைச்சர்களான ஏ.ஆர்.எம். மன்சூர், மர்ஹூம் அஸ்ஸஹீத் எம்.எச்.எம். அஷரப், பேரியல் அஷரப், முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எம். முஸ்தபா தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் ஆகியோர் இவ் மைதானத்தை அபிவிருத்தி செய்யவேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும் இதுவரை எந்தவிதமான பிரயோசனமும் ஏற்படவில்லை என்று பிரதேச விளையாட்டு கழகங்கள் மற்றும் அபிமானிகள் விசனம் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை இவ்மைதானத்தை அபிவிருத்தி செய்வதிலும் சர்வதேச மைதானமாக ஆக்குவதிலும்  இப்பிரதேசத்;தைச் சாராத பாராளுமன்ற உறுப்பினரான அல் - ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் பலமுறை விளையாட்டு அமைச்சின் பாராளுமன்ற விவாதங்களிலும் பங்குபற்றி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில் ஒரு கட்டமாக 2011.05.06 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கல்முனை நகரத்தில் சந்தாங்கேணி பொதுவிளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்தல். எனும் தனிநபர் பிரேரணையைக் கொண்டுவந்து உரையாற்றியதோடு இவரோடு இணைந்து திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸ் அவர்;களும் உரையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆற்றிய பாராளுமன்ற விவாதங்கள் (ஹன்சாட்) இணைக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.