Header Ads



பக்கத்து வீட்டில் பூச்சி மருந்து - 2 சிறுவர்கள் மரணம் - ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சம்பவம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்றழைக்கப்படும் பகுதியில் உள்ள 7 எமிரேட்களில் ஒன்று, அஜ்மன். இங்கு வசிக்கும் வங்காள தேசத்தவரான ஹபீப் என்பவரின் 2 மகள்கள் திடீரென்று மயங்கி விழந்தனர்.

பக்கத்து வீட்டில் இருந்து வந்த பூச்சி மருந்தின் நெடி தான் மயக்கத்துக்கு காரணம் என்பதை அறிந்த ஹபீப், மகள்களை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.

ஆனால், போகும் வழியிலேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஹப்சா, சவுதா என்ற அந்த 2 சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதேபோல், மற்றொரு எமிரேட்டான புஜைராவை சேர்ந்த 35 வயது பிலிப்பைன்ஸ் பணிப்பெண்ணும் பக்கத்து வீட்டில் தெளித்த பூச்சி மருந்தின் நெடியால் மூச்சுத்திணறி பலியானார்.

No comments

Powered by Blogger.