ஆசாத்திற்கு எதிரான ஜிஹாத் போராட்டத்திற்கு அழைப்பு - மொஹமட் முர்ஸியும் ஆதரவு
சிரியாவில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் புனிதப்போருக்கு தயாராகுங்கள் என்று அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக களமிறங்கியுள்ள மதத் தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் மதத் தலைவர்கள் எகிப்து அதிபர் முகம்மது மோர்சியை நேற்று முன்தினம் சந்தித்தனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தருவதாக அவர்களிடம் எகிப்து அதிபர் வாக்குறுதி அளித்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யூசப் எல்-கொரடாவி, ‘சிரியாவில் மக்களை ஒடுக்க நினைக்கும் பஷர் அல் ஆசாத்தின் அடக்குமுறை இஸ்லாத்திற்கு எதிராக தொடுக்கப்படும் போர் போன்றது.
அவரது ஆட்சிக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிராக நடைபெறும் இந்த புனிதப் போரில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்’ என்று கூறினார்.

Post a Comment