நாட்டில் 22 வீதமானோர் அளவுக்கு அதிகமான உடல்நிறை
நாட்டில் 22 வீதமானோர் அளவுக்கு அதிகமான உடல்நிறையை கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 10 சதவீதமானோர் மாணவர்கள் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அளவுக்கு அதிகமான உடல்நிறையை கொண்டிருத்தலானது, பல தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான காரணமாகவும் அமைவதாக மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
நபரொருவரின் உயரத்திற்கு ஏற்ப அவரது உடல் நிறை காணப்பட வேண்டும் எனவும் அதற்கு அதிகமாக உடல் நிறை காணப்படுமாயின் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான காரணமாக இது அமைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக டொக்டர் அனில் சமரநாயக்க கூறியுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 19ஆம், 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் பொரளையிலுள்ள மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆய்வு நடவடிக்கையில் 600 பேரை ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
15-50 வயதுக்கு இடைப்பட்ட, தமது உடல் பருமன் அதிகம் என எண்ணும், அனைவரையும் இந்த ஆய்வுகளுக்கு வருகைத் தருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்போது அவர்களின் உடல் முழுமையாக ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் விருப்பத்திற்கு அமைய அவர்களது உடல் பருமனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் அனில் சமரநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment