Header Ads



ஏறாவூர் பிரதேச விளையாட்டு விழா (படங்கள்)



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் மற்றும் ஏறாவூர் நகர பிரதேச செயலகம் என்பன இணைந்து நடாத்;திய பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான 2013 பிரதேச விளையாட்டு விழா டாக்டர் அஹமட் பரீட் விளையாட்ட மைதானத்தில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மட் ஹனீபா தலைமையில நேற்று வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமான இவ்விளையாட்டு விழாவில் மென்பந்து கிரிக்கட் போட்டி , மெய்வல்லுனர் நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

இங்கு இ.வி.ஆர். (நுஏசு) அணிக்கும் (ளுருர்சுஐகுநு ) சுஹ்ரிப் அணிக்கும் இடையில் இடம்பெற்ற கண்காட்சி கிரிக்கட் போட்டியில் இ.வி.ஆர். (நுஏசு) அணி 7 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றது.போட்டியின் நடுவர்களாக எம்.ஏ.கலீபதுல்லாஹ்,எம்.எம்.றிகாஸ்ஆகியோர் கடமையாற்றினார்கள்.

இதன் போது 2013ம் ஆண்டிக்கான சம்பியன் கழகமாக ஏறாவூர் இளந்தாரகை விளையாட்டு கழகம் தெரிவானது அத்தோடு 2013ம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட மட்ட எல்லே மற்றும் உதைப்பந்;தாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற இளந்தாரகை விளையாட்டு கழகத்தினரை பாராட்டி நினைவுச் சின்னம் நிகழ்வின் பிரதம அதிதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் றமீஸா ,காத்தான்குடி பிரதேச செயலாளர் முஸம்மில்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலய முகாமையாளர் யு.அஹமட் லெப்பை,கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன் , ஏறாவூர் நகர பிரதேச கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷேய்க் ரிஸ்வான் (மதனி) மற்றும் உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.




No comments

Powered by Blogger.