Header Ads



தெல்தோட்ட எனசல்கொல்ல மத்திய கல்லூரியில் விஞ்ஞானப் பிரிவு ஆரம்பம்


தெல்தோட்ட, எனசல்கொல்ல மத்திய கல்லூரியில் எதிர்வரும் 6 ஆம் திகதி உயர்தர விஞ்ஞானப் பிரிவிற்க்கான கற்கைகள் ஆரம்பமாகும் என கல்லூரியின் அதிபர் திருமதி ஹாஜரா உம்மா தெரிவித்தார்.

தெல்தோட்ட விஞ்ஞான செயற்றிட்டம் எனும் பெயரில் இதற்கான பாரிய முன்னெடுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. மே மாதம் முதலாம் திகதி தெல்தோட்ட பாடசாலைகளினது பழைய மாணவர்களின்  கொழும்புக் கிளை ஏற்பாடு செய்த ஆலோசனைக் கூட்டமொன்று கொழும்பு 10 அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. கொழும்புக் கிளையின் தலைவி ஓய்வூ பெற்ற அதிபர் நாகூர் உம்மா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திலேயே விஞ்ஞானப் பிரிவின் அங்குரார்ப்பனம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.

நீதி அமைச்சர் அல்ஹாஜ் ரவூப் ஹகீம் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் தெல்தோட்ட பிரதேசத்தைதின் கல்வி எழுச்சி தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

பிரதேச கல்வி எழுச்சிக்காக அனைத்து பாடசாலைகளையும் தழுவிய வகையில் க.பொ.த உயர் தரத்தை வலுவூட்டுவதற்கான பல்வேறு செயற்றிட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அதில் ஒரு அங்கமாக எனசல்கொல்ல மத்திய கல்லூரியை மையப்படுத்தி தெல்தோட்ட விஞ்ஞான செயற்றிட்டத்தை ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இத்திட்டத்தின் தலைவராக செயற்படும் கிராமசேவை அதிகாரி முஸவ்விர் தெரிவித்தார். 

மாணவர்களுக்கான பிரத்யேக வகுப்புகள், தங்குமிட வசதிகள், மேலதிக பிரயோக வகுப்புகள் போன்றன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மஹிந்தோதய 1000 பாடசாலைகள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட எனசல்கொல்ல மத்திய கல்லூரியில் இம்முறை 20 க்கும் அதிகமான மாணவர்கள் மிகச் சிறப்பான சித்தியைப் பெற்று விஞ்ஞானப்பிரிவில் கற்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றனர். எனவே வழமைபோல் அவர்கள் தூர பிரதேசங்களுக்குச் சென்று சிரமப்படுவப்படவோ கல்வியை இடைநடுவில் விட்டுவிடவோ நிர்ப்பந்த நிலை இருக்காது என அவர் மேலும் தெரிவித்தார்

இக்கூட்டத்தில் உரையாற்றிய கௌரவ நீதி அமைச்சர் ரவூப் ஹகீம்,

தெல்தோட்ட பிரதேச அபிவிருத்தியில் தான் எப்போதும் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டு பங்களித்துள்ளதாகவும் ஆரம்பமாகவிருக்கும் விஞ்ஞான செயற்றிட்டத்திற்கு தனது பூரண ஒத்துழைப்பையும் உதவியையையும் வழங்க தயாராக இருப்பதாகவும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கல்வி அமைச்சருடனும் மத்திய மாகாண முதலமைச்சருடனும் உடனடியாக தொடர்புகொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

எனசல்கொல்ல, அல்ஹிக்மா பாடசாலையின் அதிபரி திருமதி ஆபிதா, பல்லேகம புத்திஜீவிகள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மற்றும் கொழும்புக் கிளையின் உறுப்பினர்கள் மற்றும் தெல்தோட்ட பாடசாலைகளின் பழைய மாணவர்கள், கல்விமான்கள், உலமாக்கள், அரசியல் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.