Header Ads



முஸ்லிம்கள் பர்தா அணிவதை தடை செய்ய வேண்டும் - பொதுபல சேனா ஆர்ப்பாட்டம் (படங்கள்)


(மொஹமட் பாயிஸ்)

சிங்கள பாடசாலைக்கு முஸ்லிம்கள் பர்தா அணிந்து செல்வதை தடை செய்ய வேண்டும், முஸ்லிம்கள் கருப்பு ஹபாயா உடைகள் அணிந்து காரியாலயங்களுக்கு செல்வதையும், தொழில்களில் ஈடுபடுவதையும் தடை செய்ய வேண்டும். அதற்கு அரசியல் வாதிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றதோடு இறைச்சி அருக்கும் நிலையங்களை மூடவேண்டும் மத மாற்றத்தை உடன் நிறுத்த வேண்டும், சிங்கள பௌத்தர்களின் நாடான இலங்கையில் மதமாற்றம், மிருக பலி போன்றன களைந்து எறிய வேண்டும் என்ற கோரிக்கைகளையும், அரசியல் உயர் பீடங்கள் கவனம் செலுத்தி உடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.   

தீக்குளித்த போவத்தே இந்திரரத்ன ஹிமியின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி பொதுபலசேனா பதுளை கிளை பதுளையில் எதிர்ப்பு ஊர்வலமொன்று இன்று பி.ப. 2.00 மணிக்கு பதுளையில் இடம்பெற்றது. சுமார் 500 க்கும் குறைவானவர்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு ஊர்வலம் பதுளை முத்தியங்கனை ரஜ மாவிகாரையிலிருந்து ஆரம்பமாகி பதுளை லோவர் வீதி, பஸார் வீதியூடாக பதுளை மாநகர சபைக்கு வந்தது. அங்கு பதுளை மாநகர முதல்வர் உபாலி நிஸ்ஸங்க குணசேகரவிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர். அதன்போது பொதுபலசோன இயக்கத்தினர் நகர எல்லைக்குள் இறைச்சி கடைகளை தடை செய்ய வேண்டிய சட்ட மூலத்தை உடன் அமுல் நடத்தும் படி கேட்டுக் கொண்டனர். அதனையடுத்து ஊவா மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று பொது பல சேனா இயக்கத்தினர் ஆளுனர் சீ. நந்தமெதிவிடம் கையளித்தனர்.  அதனையடுத்து ஊவா மாகாண சபைக்கு சென்ற பொது பல சேனா இயக்கத்தினர் முதலமைச்சரிடம் கையளிக்க வேண்டி செயலாளரிடம் ஒப்படைத்தனர். இதன் போது பதுளை நகரில் கடைகள் மூடப்பட்டன. பொலிஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். 



8 comments:

  1. சகோதரர்களே இது கண்டிப்பாக அரசாங்கத்தின் விழையாட்டுதான் ஏனென்றால் மகிந்த ராஜபக்சவின் ஊழல்களையும் கொத்தாப ராஜபக்சவின் ஊழல்களையும் திசைதிருப்புவதற்கு அரசாங்கம் ஆடுகின்ற நாடகம்தான் இது ஆகவே நாம் அரசாங்கம் செய்யும் ஊழல்களையும் மோசடிகளையும் பேசுவதை ஒருபோதும் நிறுத்திவிடக்கூடாது அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீறிய குற்றச்செயல்களை மறைப்பதற்கும் வெளினாடுகளின் கவனத்தைத்திருப்புவதற்கும்தான் இதுபோன்ற நாடகங்களை ஆடுகின்றார்கள் ஆகவே இது சம்மந்தமான விழிப்புணர்வுகளையும் விபரங்களையும் நம் சமுதாயத்தில் அனைவருக்கும் எடுத்து சொல்வோம் சிந்தனையுடன் செயல்படுவோம். இன்னும் விரிவாகச்சொல்லவேண்டுமென்றால் அரசாங்கம் குற்றம் செய்துள்ளது தற்போது போர் முடிந்து நாடு அமைதியாக இருக்கின்றது ஆதலால் எல்லோரின் பார்வையும் அரசாங்கம் என்னசெய்கின்றது என்பதைப்பற்றியே திரும்பும் அதனால் அவர்களின் அண்டவாளங்கள் வெளியாகும் அதை திசை திருப்புவதற்காகவே இந்த நாடகம். இதற்கான தீர்வு என்ன? எப்படி இந்தப்பிரச்சினயை அணுகி நாம் தப்பிக்கொள்ளவேண்டுமென்பதுதான் தற்போதைய கேள்வி காரணம் அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளது எமது உணவு முறை உடை மற்றும் நமது வாழ்க்கை நடைமுறையாக இருப்பதுதான் கவலைக்குரியதும் யோசிக்கவேண்டியவிடயமுமாகும்.....

    ReplyDelete
  2. முஸ்லிம்களின் ஒற்றுமையும் பொறுமையும் இந்த நேரத்தில் மிக மிக அவசியம். அல்லாஹ்விடம் மன்றாடி தொழுது, துஆ இறைஞ்சலில் அனைத்து முஸ்லிம்களும் ஈடு பட வேண்டும். தக்க நேரத்தில் தக்க முடிவை எல்லாம் வல்ல அல்லாஹ் கொடுத்து இவர்களை அடக்குவான்.

    ReplyDelete
  3. என்ன மீண்டும் குநூத் ஓதுவதை ஆரம்பிக்கலாமா....உலமா

    ReplyDelete
  4. உலகில் யாரும் எந்த மதத்திகும் மாறுவதற்கும் , பின்பற்றுவதற்கும் உரிமை உண்டு.......
    எந்த மனிதனுக்கும் ஆபாசமில்லாமல் தான் விரும்பும் ஆடையை அணிவதற்கும் , எந்த ஒரு கலாச்சாரத்தைப் பின்பற்றுவதற்கும் உரிமை உண்டு......
    இவை அடிப்படை மனித உரிமை...
    அடிப்படை மனித உரிமையை கட்டுப்படுத்துவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது....?
    இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் இவர்களை கட்டுப்படுத்த வேண்டும்....!

    ReplyDelete
  5. யா அல்லாஹ்! இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கொத்துவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் இக்கயவர்களை உன்னிடமே போறுப்புச் சாட்டுகிறோம். இவர்களின் உள்ளங்களில் பிளவை ஏற்படுத்துவாயாக. இவர்களின் ஒற்றுமையை சிதறச் செய்வாயாக. இவர்களுக்கு மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்தி ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அடித்துக்கொண்டு சாகச் செய்வாயாக. இவர்களின் சமூகமே இவர்களை ஒதுக்கி ஓரம்கெட்டச் செய்வாயாக. இவர்களின் குற்றம் குறைகளை மக்களுக்கு மத்தியில் பகிரங்கப்படுத்துவாயாக. இவர்களை அவமானப்படுத்துவாயாக. இவர்களின் எந்தக் கருத்தையும் செல்லாக் காசாக ஆக்குவாயாக. இறைவா! உன்னிடமே பிரார்த்திக்கின்றோம். பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக.

    ReplyDelete
  6. Is Mahinda sleeping in Japan and China while Gota doing all his rounds. Is the rule of this country handed to half baked Bikkus? Why is the government silent on this issue? Why are they allowing all this up to now? The most terrorizing religious group we have seen here in Srilanka in yellow robe. What is the so called learned GL doing? Make a statement in parliament soon. All the ministers are silent until the whole government machinery is used for their propaganda. STOP these thugs. Otherwise reaction will too ugly for Mahinda and Gota company Ltd.

    ReplyDelete
  7. brothers...
    For the kind info.. A week back Two Sinhala brothers accepted Islam in Qassim region in KSA.. If Almight Allah wants to guide a person to rightous way, no one can stop it.

    ReplyDelete
  8. brothers...
    For the kind info.. A week back Two Sinhala brothers accepted Islam in Qassim region in KSA.. If Almight Allah wants to guide a person to rightous way, no one can stop it.

    ReplyDelete

Powered by Blogger.