Header Ads



ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் சான்றிதழ் வழங்கும் வைபவம்


ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் பாடசாலைக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட 'துணிகரமிக்கவர்களை கண்டறிவதற்கான ஆரம்பம் ISA (Initiation For Searching The Adventurers) வதிவிட செயலமர்வுகளில் பங்குபற்றிய மருதமுனையைச் சேர்ந்த 37  மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் 2013.05.17 மருதமுனை ஜம்இய்யா காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் SM.. றஸ்ஸான் (நளிமி)  மற்றும் விஷேட அதிதியாக கமு/புலவர்மணி ஆ.மு.ஷரிபுதீன் மகா வித்தியாலய பிரதி அதிபர் MAM. இனாமுல்லாஹ் மற்றும் விஷேட அதிதிகளாக ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் கிழக்குப் பிராந்திய தலைவர் IM.இப்திகார், கிழக்குப் பிராந்திய செயலாளர் BM.மின்ஹாஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் ஜம்இய்யா, ஜமாஅத் அங்கத்தவர்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.