Header Ads



இலங்கை பாதுகாப்பற்ற நாடு - பிரித்தானியா கூறுகிறது


இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதனைத் தவிர்க்குமாறு பிருத்தானியா தமது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  கடந்த வருடம் தங்காலை பகுதியில் வைத்து பிரித்தானிய பிரஜை ஒருவர் குழு ஒன்றினால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதுடன். மற்றுமொருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பான விசாரணைகளை அவதானிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சைமன்  டன்ஸன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அந்த நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சைமன்  டன்ஸன் இது தொடர்பாக கருத்து  தெரிவிக்கையில்,

இலங்கை ஒரு பாதுகாப்பு அற்ற நாடு இந்த நிலையில் பிரித்தானியர்கள் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கு கொஞ்சமும் பாதுகாப்பு இல்லை. அத்துடன் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜைக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த போதிலும், இதுவரை கிடைக்கவில்லை. 

எனவே பாதுகாப்பு அற்ற நாட்டிற்கு செல்வதில் அனைவரும் விழிப்புடன் இருங்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.