Header Ads



புத்த தர்மத்தை வலுவடையசெய்ய வேண்டும் - இலங்கையில் தாய்லாந்து பிரதமர்


(Adt) இலங்கையும் தாய்லாந்தும் ஜனநாயக அரசாட்சி நடத்தும் இரண்டு நாடுகள் என்றபோதும் இரு நாட்டு ஜனநாயக ஆட்சிக்கும் சில சமயங்களில் அழுத்தங்கள் காணப்டப்டதாக தாய்லாந்து பிரதமர் யின்லக் சின்வாத்ரா தெரிவித்துள்ளார். 

எனினும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட நாடுகள் என்ற அடிப்படையில் இலங்கையும் தாய்லாந்தும் அரசியல் ரீதியில் வலுப்பெற்று செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (31) இலங்கை வந்த தாய்லாந்து பிரதமர், பிற்பகல் பாராளுமன்றத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு பேசிய போதே இவ்வாறு தெரிவித்தார். 

இலங்கையும் தாய்லாந்தும் புத்த தர்மத்தை கடைப்பிடிக்கும் நாடுகள் என்ற காரணத்தினால் புத்த தர்மத்தை வலுவடையச் செய்து அணுகூலமான வாழ்க்கையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். 

உலக மொத்த சனத் தொகையில் 60 வீத மக்கள் ஆசிய வலயத்தில் வாழ்வதாகவும் இந்த மக்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காக போக்குவரத்து கட்டமைப்பை அபிவிருத்தி செய்ய வேண்டும் என தாய்லாந்து பிரதமர் கூறினார். 

No comments

Powered by Blogger.