முஸ்லிம் வர்த்தகர் கடத்தப்பட்டு படுகொலை - தொம்பையில் ஜனாஸா மீட்பு
பேருவளை தர்காடவுனைச் சேர்ந்தவரும், கொழும்பில் வசித்து வந்தவருமான 35 வயதுடைய ஷியாம் என்ற முஸ்லிம் வர்த்தகர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் 8 நாட்களுக்கு முன் கடத்தப்பட்டிருந்தார்.
கடத்தப்பட்டவரின் ஜனாஸா தொம்பை என்ற பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை, 31 ஆம் திகதி மீட்கப்பட்டுள்ளது.
இவரின் ஜனாஸா நல்லடக்கம் தற்போது தெஹிவளை முஸ்லிம் பள்ளிவாசலில் நடைபெற்றுவருதாக (இலங்கை நேரம் மாலை 7.10) அங்கிருக்கும் மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
இவரின் ஜனாஸா நல்லடக்கம் தற்போது தெஹிவளை முஸ்லிம் பள்ளிவாசலில் நடைபெற்றுவருதாக (இலங்கை நேரம் மாலை 7.10) அங்கிருக்கும் மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
இக்கொலைக்கு வபாத்தானவரின் உற்ற சகா ஒருவரே காரணமென்றும் ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது.

"உற்ற சகா" தனக்கு ஒரு நரகம் வருமே என்ற உண்மையை உணராது இந்த படுகொலையை செய்திருக்கிறான். எத்தனை ஆழத்தில் வீசப்படுவான் ? ஏன் இந்த மடமை?
ReplyDelete