ஜப்னா முஸ்லிம் இணைய செய்திக்கு கைமேல் பலன்
(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)
முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 23 கிராம மக்களினதும் நீண்ட கால கோரிக்கை நிறைவு பெற்றுள்ளது. இப்பிரச்சினை தொடர்பான செய்தி அண்மையில் யாழ் முஸ்லிம் இணையதளத்தில் பிரசுரமாகி இருந்தது.
இச்செய்திக்கு இப்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது. முசலிப்பிராந்திய மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்துவந்த உயர்தர கணித விஞ்ஞான வகுப்புகளுக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
எதிர்வரும் 13.05.2013 அன்று மன்-முசலி மகிந்தோதயப் பாடசாலையில் வகுப்புக்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
வகுப்புக்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ள வைபவத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன், வடமாகாண ஆளுனர் சந்திரசிறி முசலிப்பிரதேசசபைத் தவிசாளர் அ.வ.எஹியான், மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான்,கோட்டக்கல்விப்பணிப்பாளர் அ.ச.ஜீனைட் அவர்களும்,புத்திஜீவிகள்,நலன்விரும்பிகள்,போன்றோரும் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.
முசலிப்பாடசாலையில் இடம்பெறும் இவ்வாறான முன்னேற்ற நகர்வுகள் இப்பிரதேச மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்துமென புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment