தென்கிழக்குப் பல்கலைக்கழக முதலாம்வருட மாணவர் கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பம்
(Nf) தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தின் விடுதி வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக மாணவர்கள் இன்று பிற்பகல் 5 மணிக்கு முன்னர் சமூகமளிக்குமாறும் அவர் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்படி, கலை, கலாசாரம், வர்த்தகம். முகாமைத்துவம், இஸ்லாமிய கற்கை, அரபு மொழி, பொறியியல், பிரயோக விஞ்ஞானம் ஆகிய பிடங்களைச் சேர்ந்த 1750 மாணவர்கள் முதலாம் வருடத்திற்காக இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, 4 ஆம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ஆம் திகதியும், ஏனைய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 10ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதிவாளர் கூறினார்.

Post a Comment