மியன்மார் முஸ்லிம்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு - 2 பிள்ளைகள் பெறவே அனுமதி
மியான்மரின் மேற்கு பகுதியில் வங்காளதேச எல்லையில் ராக்கின் மாகாணம் உள்ளது. இது முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பிக்குகளும், பௌத்தர்களும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்
அப்போது, முஸ்லீம்களின் ஆயிரக்கணக்கான வீடுகளை புத்தமதத்தினர் தீ வைத்து கொளுத்தினர். நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். 1 லட்சத்து 25 ஆயிரம் முஸ்லீம்கள் வீடுகளை இழந்தனர்.
கலவரம் குறித்து விசாரணை நடத்த அரசு ஒரு குழுவை அமைத்தது. அக்குழு நடத்திய விசாரணையில் முஸ்லீம்களின் மக்கள் தொகை பெருக்கமே மதக்கலவரம் ஏற்பட காரணம் என தெரியவந்தது. இந்த மாகாணத்தில், புத்தமதத்தினரைவிட முஸ்லீம்களின் மக்கள் தொகை 10 மடங்கு அதிகம் இருப்பதால் தான் இந்த கலவரம் உருவானதும் கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, மியான்மரில் முஸ்லீம்களுக்கும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்த அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மியான்மரில் ராகின் மாகாண முஸ்லீம்கள் குடும்பத்துக்கு தலா 2 குழந்தைகள் மட்டுமே பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், முஸ்லீம்களின் பலதார திருமணத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ராகின் மாகாண செய்தி தொடர்பாளர் வின்மியாங் தெரிவித்தார்.

இது மனித உரிமை மீறல்.....
ReplyDeleteதனி ஆள் செய்தால் தவறு,, அரசாங்கம் செய்தால் சரியா?
இது அநீதி,,,,,,,,
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எங்கே.......?
திருமணம் செய்வது , பிள்ளை பெறுவது தனிமனித உரிமை....."
முஸ்லிம் சமுதாயத்துக்காக கண்டிப்பாக நாம் துஆச்செய்வோம் இதுபோன்ற நிலைமகளிலிருந்து நம்ம இறைவன் காப்பாற்றவேண்டும்.
ReplyDeleteஇவைகள் இன்று மியன்மாரில். நாளை??????? அல்லாஹ்வே போதுமானவன். அவனது நாட்டமின்றி எவராலும் ஒரு துரும்பையும் அசைக்கமுடியாது.
ReplyDelete