Header Ads



நோயாளிக்கு எடுத்த மருந்தை சுகதேகிக்குப் பருக்கிய கதை

(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

இன்று ஊடகங்களில் அதிகம் பேசப்படுவது அரசியலமைப்பின் 13 வது திருத்தச்சட்டமூலமும்,வடமாகாணசபைத் தேர்தலுமாகும்.இவ் இரு விடயங்கள் தொடர்பிலும்,பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையேயும்,பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயும் கருத்துவேறுபாடுகளும்,வாதப்பிரதிவாதங்களும் நிலவுவதை அறியமுடிகிறது.

இலங்கை வரலாற்றில் பல ஒப்பந்தங்கள் நடைபெற்றுள்ளதை நாம் அறிவோம். அவற்றில் முக்கியமானவை,

பண்டா,செல்வா    ஒப்பந்தம்
டட்லி, செல்வா ஒப்பந்தம்
சிறிமா, சாஸ்திரி ஒப்பந்தம்
ராஜிவ், ஜேயார் ஒப்பந்தம்

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக உருவாக்கப்பட்டதே ஜேயார் ராஜிவ் ஒப்பந்தம்.இதன் பிரகாரமே இலங்கை அரசியல் யாப்பின் 13 சீர்திருத்தப் பிரகாரம் 08 மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன.வடகிழக்கு மாகாணங்கள் நிபந்தனை அடிப்படையில் இணைக்கப்பட்டிருந்தன. ஆதிகாரங்களைப் பரவலாக்கும் நோக்குடனே இம்மாகாண சபை முறைமை அறிமுகமாகியது.வடகிழக்கு மாகாணசபையின் அதிகாரத்தை முதன்முதலில் வரதராஜப்பெருமாள் தலமையிலான கட்சி கைப்பற்றிக்கொண்டது. பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைகாரணமாக இரவோடிரவாக தனிநாட்டுப்பிரகடனத்தைச் ;செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச்சென்றார் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்.

இதன் பிற்பாடு ஆளுனரின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் வடகிழக்கு மாகாணசபை கொண்டுவரப்பட்டது.வடகிழக்கு மாகாணசபை நீதிமன்றத்தால் தனித்தனியாகப் பிரிக்கப்படும்வரை ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்துவந்தது .கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகளின் கைக்கு அதிகாரம் கைமாறியது.முதலமைச்சராக சிவநேசத்துரை சந்திரகாந்தன் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.அவரின் தலைமையிலான மாகாண நிருவாகம் உரிய காலத்தைப்பூர்த்தி செய்ததும் 2012 தேர்தலில் பின்னர் நஜீப் அப்துல் மஜீத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டு ஆட்சிநடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இதே வேளை வடமாகாணம் ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றது.

நோயாளிக்காக வாங்கிவந்த மருந்தை சுகதேகிக்கு பருக்கியதுபோல,வடகிழக்கு மக்களுக்காக கொண்டு வரப்பட்ட மாகாணசபை முறைமை ஏனைய 7 மாகாணங்களிலும் , ஆரம்பம் முதல் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது.கிழக்கிலும் தற்போது சரியாக உள்ளது.இவ்வதிகாரம் எப்போது கிடைக்கும் என வடமாகாண மக்கள் காத்திருக்கின்றனர்.

அன்று ஜேயார் ஜெயவர்தன அவர்கள் சாணக்கியமாக இச்சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார்.அதனை அப்போது செய்திருக்காவிடில் அன்று நாடு பாரிய சிக்கலை எதிர்கொண்டிருக்கும்.இந்த வரலாறெல்லாம் தெரியாமல் ஒரு கும்பல் மாகாணசபை முறைமையை ஒழிக்குமாறு கூச்சல் போடுகிறது.இதனைக் கேட்டுக்கெர்ண்டு எவ்விதக்கருத்துக்களும் கூறாமல் மௌனம் காக்கின்றனர்.தற்போது மாகாணசபை ஆட்சியில் இருப்போர்.

அடுத்தவாதம் வடமாகாணசபைத் தேர்தல் வைக்கப்பட்டால்,நாடு பிரிந்துவிடும்,பாடுபட்டுக்கிடைத்த சுதந்திரம் பறிபோய்விடும். இதுமுற்றிலும் தவறானது.சர்வ அதிகாரமிக்க ஜனாதிபதி முறை இருப்பதால் ஒரு மாகாணசனப வரம்பு மீறிச்செல்கிறதென்றால் அதனைக் கலைத்துவிட்டு அம்மாகாணத்தை ஆளுனரின்கீழ் கொண்டுவர முடியும். இப்படியான சம்பவங்களை இந்தியாவின் அரசியலில் நாம் கண்டிருக்கிறோம்.

நூம் சொல்ல வருவது,பலவந்தமாக இனச்சுத்திகரிப்பு நோக்கில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 23 வருடங்கள் கழிந்த பின்பும் முழுமையாக இன்னும் குடியேற்றப்படவில்லை.ஆனால் வன்னி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீள் குடியேற்றப்பட்டு அவர்கள் இருந்த முகாம்களும் மூடப்பட்டுள்ளன.இவ்வாறான ஒருகளநிலையில் வடமாகாணசபைத் தேர்தல் வெளிநாட்டினரைத் திருப்திப்படுத்தும் நோக்கில் நடத்தப்படக்கூடாது.நாம் தேர்தல் நடத்தப்பபடக் கூடாது என்ற அர்த்தத்தில் இiதைச ;சொல்லவில்லை. 13 வது திருத்தம் ஒழிக்கப்படக்கூடாது.அது மேலும் வலுப்படுத்தபடவேண்டும்.எமது மக்கள் குடியேற்றப்பட்ட பின்பு தாராளமாக வடமாகாணசபைத் தேர்தலை நடாத்துங்கள்.

நிலைமை இப்படி இருக்கும்போது ஐக்கிய தேசியக் கட்சியும்,முஸ்லிம் காங்கிரசும் பொருத்தமான அபேட்சகர்களைத் தெரிவு செய்வதில் ஈடுபட்டுள்ளன.இம்மக்கள் மீளக்குடியேற்றப்படவேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் இல்லை.இவர்களின் அவசரத் தேவை தேர்தல்.இம்மனநிலையை வடபுலமுஸ்லிம்கள் கண்டிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.