சவூதி அரேபிய அறிஞர்களால் அறபுக்கல்லூரி மாணவர்களுக்கான விஷேட கருத்தரங்கு
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அறபுக்கல்லூரி மாணவர்களுக்கான விஷேட அறிவுசார் கருத்தரங்கு இன்று சனிக்கிழமை காலை தொடக்கம் பிற்பகல் வரை காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரி மண்டபத்தில் ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரி கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி அமீன் (பலாஹி )தலைமையில் இடம்பெற்றது.
உலக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் அனுசரனையுடன் அபிவிருத்திற்கும் மனிதாபிமானத்திற்குமான சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விஷேட அறிவுசார் கருத்தரங்கில் சவூதி அரேபிய ரியாத் ஜாமியதுல் இமாம் ஸூஊத் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் உமர் இப்னு ஸூஊத் அல் ஈத், சவூதி அரேபிய சமூக நலன் விரும்பியும் நிதாஉல் கைர் அமைப்பின் தலைவருமான அஷ்ஷெய்க் அபூ ஸாலிஹ் ஹாலித் தாவூத்,சவூதி அரேபிய அல் கஸீம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அபூ ஸூலைமான் அப்துல்லாஹ் ஸாலிஹ் அல் ஹத்லூல்,ரியாத் அல் குர்-ஆன் மனனப் பிரவு உப தலைவர் அஷ்ஷெய்க் அப்துர் றஹ்மான், சவூதி அரேபிய வளவாளர்களான அஷ்ஷெய்க் இப்றாஹீம், அஷ்ஷெய்க் ஸர்ஹான்,காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி), காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) ,காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி கவிமனி எம்.எச்.எம்.புஹாரி (பலாஹி), காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி), ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் விரிவுரையாளர் மௌலவி எம்.பி.எம்.பாஹிம் (பலாஹி),காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரி,காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி,வாழைச்சேனை நஹ்ஜிய்யா அறபுக்கல்லூரி,பொலன்னறுவை மஜீதிய்யா அறபுக்கல்லூரி உள்ளிட்ட அறபுக்கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் சவூதி அரேபிய அல் கஸீம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அபூ ஸூலைமான் அல் ஹத்லூல் ,ஜாமியதுல் இமாம் ஸூஊத் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் உமர் இப்னு ஸூஊத் அல் ஈத் ஆகியார் விரிவுரை நிகழ்த்தியதுடன் அதை காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) தமிழில் மொழி பெயர்த்தமை குறிப்பிடத்தக்கது.



May Allah Guide our SriLankan Muslim Brothers and Sisters get to know the Manhaj of Salaf us Saleheens and be firm in holding the religion in the same manner it was holed by the sahaabaa of Muhammed (sal)
ReplyDelete