துருக்கியில் குண்டுவெடிப்பு - 42 பேர் மரணம், 140 பேர் காயம்
துருக்கி நாட்டின் சிரியா எல்லையோரம் அமைந்துள்ள ரெய்ஹான்லி நகரில் கார் குண்டுகள் வெடித்தன. நகரின் சிட்டி ஹால் மற்றும் போஸ்ட் ஆபிஸ் அருகே 4 இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 18 பேர் கொல்லப்பட்டனர். 140 படுகாயமடைந்தனர்.
சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் அடுத்தடுத்து பலர் இறந்ததால் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்தது.
சிரியாவில் இருந்து வரும் போராளிகளுக்கு ஆதரவு அளித்து வருவதால், துருக்கி அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதனால், கடந்த சில மாதங்களாக இப்பகுதி தாக்குதலுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த குண்டுவெடிப்பை அடுத்து சிரியாவிலிருந்து வந்த கார்களையும், மக்களையும் அங்குள்ளவர்கள் அடித்து நொறுக்கினர்.

Post a Comment