Header Ads



கல்முனை கல்வி வலய விளையாட்டுப் போட்டியில் சம்பியனானது மதீனா பாடசாலை


(சுலைமான் றாபி) 

2013ம் ஆண்டிற்கான கல்முனை கல்வி வலய விளையாட்டுப் போட்டியில் 15 மற்றும் 19 வயதிற்குட்பட்ட  கபடிப்போட்டியில் நிந்தவூர் மதீனா பாடசாலை சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. (30.05.2013) இடம்பெற்ற  விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டியில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம அவர்கள்   நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.எல்.எம் சலீம் அவர்களிடத்தில் வெற்றிக்கேடயத்தை வழங்கி வைத்தார். 

இதேவேளை மதீனா பாடசாலையின் கபடி துறையின் வளர்ச்சிக்காக ஆசிரியர்களான ஏ.நசீர், ஏ.ஜாபிர் கபூர், மற்றும் எஸ்.எம்.இஸ்மத் ஆகியோர்கள் செயற்பட்டுக்கொண்டிருப்பது  முக்கிய அம்சமாகும்.  


No comments

Powered by Blogger.