அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான விழிப்பூட்டல் செயலமர்வு
(அப்துல் அஸீஸ்)
தேர்தல் செயலகத்தினால் அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான விழிப்பூட்டல் செயலமர்வு இன்று கல்முனை மஹ்மூத் மகளில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜுன் 1ஆம்; திகதியை தேர்தல் வாக்காளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாகவும், வாக்காளர் வருடாந்த பதிவுகள் மற்றும் வாக்காளர் பதிவுகள் மேற்கொள்ளும் போது ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்தல் தொடர்பாகவும் இந்நிகழ்வில் விழிப்பூட்டப்பட்டது.
அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் திலிண விக்ரம ரத்ண தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் உட்பட பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் பிரதிநிதிகள், கிராம உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


Post a Comment