அரசாங்கத்தை நிலைதடுமாற வைப்பதற்கு ஒத்துழைப்பை கேட்கிறார் ரணில்
![]() |
ராஜபக்ஷ ரெஜிமென்ட் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்துள்ள நிலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய தொழிற்சங்க போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்ஷ ரெஜிமென்ட் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்களின் எதிர்ப்பு போராட்டத்தைக் கண்டு பயந்துவிட்டது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள தேசிய தொழிற்சங்கப் போராட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பினை வெளிக்காட்ட வேண்டும்.
இந்த அரசாங்கம் மக்கள் விரோத செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றது. தற்போது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கெதிராக வீதிகளில் இறங்கத் துணிந்து விட்டனர்.
எனவே, இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கு எதிர்வரும் 2014 இல் எமக்கு தேர்தல் ஒன்று அவசியமாகவுள்ளது. நாம் அதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்து வருகின்றோம்.
இந்நிலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை நிலைதடுமாற வைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார். vi

thayavu saithu neengalmathiram vaayai thiranthdavendam payanthavanum usarahiduwan.
ReplyDeleteகண்டிப்பாக நாட்டு மக்கள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் நமக்கெதிராக கட்டவிழ்த்திடப்பட்டுள்ள விலை அதிகரிப்பு, முடிக்கிவிடப்பட்டுள்ள கலவரங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எதிர்க்கவேண்டிய கட்டாய கடமை இன்னாட்டு ஒவ்வொரு குடிமகனின் கட்டாய கடமை, அதேபோல் 2014 ல் தேர்தல் ஒன்றின் அவசியமும் ஏற்கனவே உணரப்பட்டுள்ளது. அதற்காகவேண்டி நாம் ஒவ்வொருவரது பங்களிப்பையும் செலுத்தி தற்போதுள்ள பிரச்சினைக்குரிய தீர்வொன்றை காணுவது மிகவும் அவசியமானதே இதை யாவரும் மனதில் வைத்துச்செயல்படுவோம் இனிவரும் காலமாவது நாம் நல்லதோர் ஒற்றுமையான சமாதானமான நிம்மதியாக வாழக்கூடிய நிலைமையை உருவாக்க உடன்படுவோம் செயல்படுவோம்.
ReplyDelete