ஜெயலத் ஜெயவர்த்தன எம்.பி. சிங்கபூரில் மரணம்
ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஜெயலத் ஜெயவர்த்தன இன்று காலை சிங்கப்பூரில் காலமானார். சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மாரடைப்பை அடுத்து, அறுவைச் சிகிச்சைக்காக அவர் கடந்த வாரம் சிங்கப்பூர் சென்றிருந்தார்.
அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர், இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவராகப் பணியாற்றிய ஜெயலத் ஜெயவரத்தன, 1994ம் அண்டு ஐதேக சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.
கடந்த 19 ஆண்டுகளாக அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த அவர், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜயலத்தின் வெற்றிடத்திற்கு மன்னப்பெரும.
ஐக்கிய தேசியக் கட்சியின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தனவின் வெற்றிடத்திற்கு மேல் மாகாண சபை உறுப்பினரும் கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் மேயருமான அஜீத் மன்னப்பெரும நியமிக்கப்படுவார் என ஐ.தே.க. தகவல்கள் தெரிவிக்கின்றன.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது தேர்தல்கள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் மேல் மாகாண சபை உறுப்பினர் அஜீத் மன்னப்பெரும அடுத்தபடியாக கூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.

மதச்சார்பற்ற மனிதாபிமானமுள்ள நல்லதொரு மக்கள் பிரதிநிதியை நாடு இழந்துள்ளது.
ReplyDeleteஅவரது பிரிவால் துயருறும் அனைவருடனம் நானும் எனது சோகங்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
பேரினவாதிகளிளன் விமர்சனங்களை பொருட்படுத்தாது சிறுபான்மை மக்களுடன் ஒன்றினைந்து செயற்பட்ட மககள் பிரதிநிதி
ReplyDeleteIts very big lost for minority
ReplyDelete