Header Ads



ஸ்ரீலங்கா ஊடக கூட்டுறவு சங்கத்தின் மட்டு.மாவட்ட பணிப்பாளராக ரீ.எல்.ஜவ்பர்கான்

இலங்கை ஊடக கூட்டுறவு சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளராகவும் தேசிய சபை உறுப்பினராகவும் சிரேஸ்ட ஊடகவியலாளரும் கிழக்குமண் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ரீ.எல்.ஜவ்பர்கான் நியமிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் றோஹண சிரிவர்த்தன தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள சிங்கள தமிழ் முஸ்லிப் ஊடகவியலாளர்களை இணைத்து இச்சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.காஞ்சன குமார தலைவராகவும் றோஹண சிரிவர்த்தன பொதுச்செயலாளராகவும் ஜூனூர் முஹம்மட் பொருளாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

25 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகம் மற்றும் இஸ்லாமியத்தமிழ் இலக்கியத்துறைகளில் முழுமையான ஈடுபாடு கொண்டுள்ள ஜவ்பர்கான் கவிதைத்துறைக்காக இலங்கை அரசின் தேசிய சாஹித்ய மண்டல விருதைப்பெற்ற முதல் முஸ்லிம் கவிஞராவார்.

5 நூல்களை எழுதியுள்ள இவர் பல உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களில்' முழுநேர ஊடகவியலாளராகவும் கிழக்குமண் தேசிய வாரப்பாத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் கடமை புரிந்துவருகின்றார்.

இலக்கியம் ஊடகம் அரசியல் சமுப்பணி என பலதுறைகளில் தன்னை இணைத்துக்கொண்டு பணிபுரியும் ஜவ்பர்கான் இதுவரை 3000த்திற்கும் மேற்பட்ட மரபு மற்றும் புதுக்கவிதைகளையும் பல சிறுகதைகள் நாடகங்கள் மற்றும் ஆய்வு அரசியல் கட்டுரைகளையும் எழுதயுள்ளார்எழுதியுள்ளார்.

 தேசிய சர்வதேச ரீதியில் 21 விருதுகளைப்பெற்றுள்ள இவர் சாஹித்யசூரி கவிச்சுடர் கவித்தாரகை கவிமுரசு சாதனைச்சநிகரம் ஊடகச்சுடர் இலக்கியவேந்தர் கவிதாநதி உட்பட பல பட்டங்களையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.






No comments

Powered by Blogger.