அம்பாறையில் இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் செயலமர்வு
(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
அம்பாரை மாவட்டத்திலுள்ள அரசாங்க உயரதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர்க்கிடையில் இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட மூன்று நாள் செயலமர்வு அம்பாரை மொண்டி ஹோட்டலில் இடம் பெற்று வருகிறது.
அம்பாரை மாவட்டத்திலுள்ள அரசாங்க அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் இப்பிரதேச ஊடகவியலாளர்களுடன் சிநேகபூர்வமாக நடந்து, அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு ஊடகவியலாளர்களை எவ்வாறு ஊக்கப்படுத்த வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
அம்பாரை மாவட்டத்திலுள்ள தமிழ்மொழி மூல ஊடகவியலாளர்கள் ' பத்திரிகை சார் ஒழுக்கக் கோவையைப் பின்பற்றி, எவ்வாறு சிறப்புற செய்திகளை வெளியிட வேண்டும்' என்பது பற்றிய கலந்துரையாடலும், ஆலோசனைகளும் இடம் பெற்றன.
இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் முறைப்பாட்டுப் பொறுப்பதிகாரிகளான எம்.எஸ்.அமீர் ஹுஸைன், லியன் ஆராய்ச்சி ஆகியோர்களால் விரிவுரைகளும் நிகழ்த்தப்பட்டன.




Post a Comment