அல் ஹிதாயா மகாவித்தியாலய பழைய மாணவர்களின் 'ஹிதாயன்ஸ் நைட்
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
கொழும்பு 10, அல் ஹிதாயா மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாடு செய்திருந்த பழைய மாணவர்களின் ஒன்றுகூடலான 'ஹிதாயன்ஸ் நைட் 2013' மற்றும் நிதி திரட்டல் நிகழ்வு சனிக்கிழமை(11) மாலை கொழும்பு கொள்ளுப்பிட்டி ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் ஏ.எப்.பெரோஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விசேட அதிதியாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி கலந்து கொண்டார். மற்றும் கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில், கல்லூரி அதிபர் எஸ்.எச்.எம்.நௌபல், பழைய மாணவர் சங்க பொதுச் செயலாளர் எம்.எஸ்.ஏ.லாபிர் உட்பட பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது பழைய மாணவர்களால் பாடசாலையின் முன்னேற்றம் கருதியும் பாடசாலையிலுள்ள பௌதீக வள தேவைக்காகவும் நிதியுதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தனதும் மேல்மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசியினதும் நிதியாக ஒரு இலட்சம் ரூபாயை வழங்கினார். அத்துடன் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புக்களையும் பாடசாலைக்கு பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்தார். அல்ஹிதாய கல்லூரியின் நினைவு மலரையும் அமைச்சர் பெற்றுக் கொண்டார்.




Post a Comment