காத்தான்குடியில் முஸ்லிம் சமூகத் தலைமைகளுக்கு செயலமர்வு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு -காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்; உலக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் அனுசரனையுடன் அபிவிருத்திற்கும் மனிதாபிமானத்திற்குமான சர்வதேச அமைப்பினால் முஸ்லிம் சமூகத் தலைமைகளுக்கான செயலமர்வு காத்தான்குடி சம்மேளன அஷ்ஷஹீட் ஏ அஹமட் லெப்பை மாநாட்டு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இச் செயலமர்வில் சவூதி அரேபிய ரியாத் ஜாமியதுல் இமாம் ஸூஊத் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் உமர் இப்னு ஸூஊத் அல் ஈத், சவூதி அரேபிய சமூக நலன் விரும்பியும் நிதாஉல் கைர் அமைப்பின் தலைவருமான அஷ்ஷெய்க் அபூ ஸாலிஹ் ஹாலித் தாவூத், சவூதி அரேபிய அல் கஸீம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அபூ ஸூலைமான் அப்துல்லாஹ் ஸாலிஹ் அல் ஹத்லூல், காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி),தென்கிழக்கு பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய பீட பீடாதிபதி அஷ்ஷெய்க் எம்.அலியார் றியாதி, அஷ்ஷெய்க் எ.எல்.மும்தாஸ் மதனி ஆகியோரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் முன்னால் மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என்.முபீன், காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,முன்னால் ஸ்ரீ.ல.மு.கா மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் ஆகியோரும் பிரசன்னமாயிருந்தனர்.
சம்மேளன தலைவர் மர்சூக் அகமட்லெப்பை தலைமையில்இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை சம்மேளன பிரதிநிதிகளும் ஊர் முக்கியஸ்தர்களும் ,ஊடவியலாளர்களும் பிரசன்னமாயிருந்தனர்.
இங்கு முஸ்லிம் சமூகத் தலைமைகளால் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான விடைகள் சவூதியில் இருந்து வருகை தந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் அளிக்கப்பட்டது.



Post a Comment