ஹோமாகம நீதிபதி லஞ்சம் பெறுகையில் வசமாக மாட்டினார்
ஹோமாகம மாவட்ட நீதிபதி சுனில் அபேசிங்க 3 லட்சம் ரூபா லட்சம் பெற்றுக்கொண்ட போது நேற்று லஞ்ச மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளர் தரப்பிற்கு சார்பான வகையில் வழக்கினை விசாரிப்பதன் பொருட்டே அவரால் லஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் லக்ஷ்மி ஜயவர்தன தெரிவித்தார்.
இதன்படி, குறித்த 3 லட்சம் ரூபா நிதியை பெற்றுகொள்ளவதற்காக நேற்று மாலை ஹங்வெல்ல பகுதிக்கு சென்றிருந்த போது ஹோமாகம மாவட்ட நீதிபதி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மாவட்ட நீதிபதி இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக லஞ்ச மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். Sfm

யாரைத்தான் நம்புவதோ...?
ReplyDeleteநாட்டின் நீதித்துறையே இவ்வளவு கேவலத்துக்குள்ளாகி விட்டது!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
If possible, please publish his photograph.. let the peopel know who is this criminal.
ReplyDeleteமங்கை ருதுவானால் கங்கைக்குப் போவாள், கங்கையே ருதுவானால் அவள் எங்கே போவாள்??????????!!!!!!!!!!1
ReplyDeleteமன்னிக்கவேண்டும் நாட்டில் தற்போது கொலகொள்ளை கற்பழிப்பு சிறுவர் துஸ்பிரயோகம் பயங்கரவாதம் மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் எங்கு நடக்கின்றது எந்த சமுதாயத்தில் அதிகமாக நடக்கின்றது என்பதை கணக்கெடுத்துப்பார்கட்டும். (இதை சாடைமாடையாகத்தான் சொல்லலாம்) ஜாதிக ஹெல உறுமய சிங்கல ராவய ”விசேடமாக” சம்பிக்க ரணவக்க அத்துடன் இன்றோ நாளையோ மண்ணோடு மண்ணாகப்போகும் பொதுபலசேன இவர்கள் அனைவரும் இதுபோன்ற காரியங்களுக்காக தீக்குளிக்க மாட்டார்களா? தேரர்கள் என்ற பெயரில் அசிங்கங்களில் ஈடுபடும் தேரர்களே முதலில் விகாரைக்கு வரும் சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்வதை நிறுத்துங்கள்.
ReplyDelete