அரச ஊழியர்கள் பாதுகாப்பாக வாகனம் செலுத்துவது குறித்து பயிற்சி
(அப்துல்சலாம் யாசீம்)
அரச அலுவலகங்களில் கடமையாற்றும் அலுவலர்கள் தங்களுக்குரிய அரசகருமங்களை செவ்வனே செய்வதற்கும், கிழக்கு மாகாணத்தின் வளங்களை அதிகரிப்பதற்கும் ஏதுவான, மிகமுக்கியத்துவம் வாய்ந்த பலவிதமான பயிற்சிகளை முறையே வழங்கிவரும் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி திணைக்களம், 2013.05.30,31 ம் திகதிகளில் கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாணத்தில் பணிபுரியும் சாரதிகளின் நேர்மனப்பாங்கை அதிகரிப்பதற்காகவும் அவர்கள் நேர்த்தியாகவும் சீராகவும் கடமையாற்றுவதற்கென சரியான ஒழுங்கு முறைகளை பாதுகாப்பான வாகன செலுத்துகை எனும் பயிற்சி ஒன்றினை 2013.05.30,31ந் திகதிகளில் உப்புவெளியில் அமைந்துள்ள தமது கேட்போர் கூடத்தில் நடாத்தி வருகின்றது, என்பதை முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். பாயிஸ் தெரிவித்துள்ளார்.
இப்பயிற்சி நெறி மங்கள விளக்கேற்றும் வைபவத்துடனும், முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ஏஎஸ்.எம்.பாயிஸ் அவர்களின் வரவேற்புரையுடனும் பிரதம விருந்தினராக சிறப்பித்த .எம்.சீ.எம்.சரீப் பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) அவர்களின் சிறப்புரையுடனும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கென பிரதம வளவாளராக வீரதுங்க, பணிப்பாளர் கொழும்பு அவர்களும், திருகோணமலை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ .சமந்த அமரசிரி வளவாளர்களாக கலந்து கொண்டனர்.



Post a Comment