Header Ads



ஹுனைஸ் பாருக் எம்.பி.யின் கவனத்திற்கு..!

(முசலியூர். கே.சி.எம்.அஸ்ஹர்)

முசலிப் பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட அரிப்புக்கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்குத் தெற்கே கடற்கரையோரமாக அமைந்துள்ள புராதன அல்லிராணி கோட்டைக்கு அண்மையிலுள்ள வெளிச்சவீட்டுக் கோபுரத்திற்குச் சூரிய ஒளியில் இயங்கும் மின்குமிழ் பொருத்தப்படவேண்டுமென இப்பிரதேச மீனவர்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுகின்றனர்.

இக்கோபுரம் உறுதியான தோற்றத்துடன் இன்றும் கம்பீரமாகக்காட்சி தருகிறது. ஆனால் அதில் மின் விளக்கு நீண்டகாலமாகப் பொருத்தப்படாமல் இருப்பது ஒரு பெருங்குறையாகவே உள்ளது. இக்கோபுரத்தில் மின்குமிழ் பொருத்தப்படும்போது மீனவர்கள்,படகோட்டிகள் போன்ற அனைவரும் பெரும் நன்மை அடைவர். படகுகள் திசைமாறிச் சென்று மீனவர்கள் காணாமல்ப்போதலும் குறைவடையும்.எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் ஒரு மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்படும் போது இவ்வெளிச்சக்கோபுரம் மிகுந்த பயனுடையதாகவும் மிளிரும்.




No comments

Powered by Blogger.