இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் விபரம்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்று முடிந்த ஸ்ரீலங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வாக்குகளின் அடிப்படையில் யூத் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் படி
1,காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு- சுஜாத் அஹமட்
2,களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவு-ஐ.வேலுராஜ்
3,பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவு-எம்.சந்திரகுமார்.
4,வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவு-எம்.யுனைஸ் ராஜ்
5,ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவு-முஹமட் ஸஜீர்
6,ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவு-முஹமட் றமீஸ்
7,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு-எம்.குகதாஸ்
ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்ட யூத் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உத்தியோகத்தர் முரளி தெரிவித்தார்.

Post a Comment