Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாரிசுகள் இளைஞர் பாராளுமன்றத்திற்கு..!


(ரீ.கே.றஹ்மத்துல்லா)

இன்று(04) நாடளாவிய ரீதியில் நடைபெற்ற  இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலிருந்து 20 இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 45 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இதில் 8 உறுப்பினர்கள் போட்டி எதுவுமின்றி தெரிவாகியுள்ள அதேவேளை 12 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் தேர்தல் களம் மிகவும் சூடுபிடித்து காணப்பட்டன.

முக்கியமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் போட்டியிட்ட பிரதான இரு வேட்பாளர்களில் ஒருவர், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் புதல்வர் யூ.எல். சபீர் என்பவர். மற்றயவர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் (ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ்) ஏ.எல்.எம். நஸீரின் மருமகன் எம்.என். பர்சாத் ஆகிய இருவருக்குமிடையே கடும் போட்டி நிகழ்ந்தது. பாலமுனை கிராமத்தைச் சேர்ந்த மூன்றாவது வேட்பாளர் ஒருவரும் இத் தேர்தலில் களம் இறங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று காலை முதல் அட்டாளைச்சேனை பிரதேச செயலகமுன்பாக ஒரு பொதுத் தேர்தலைப் போன்று இரு பிரதான வேட்பாளர்கள் தரப்பினரும் தமது ஆதரவாளர்களையும், வாக்காளர்களையும் வாகனங்கள் மூலம் ஏற்றி இறக்கியதனைக் காணமுடிந்ததுடன் எங்குமில்லாதவாறு அதிகளவிலான இளைஞர்களும், யுவதிகளும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்தக் கொண்டு நின்றனர்.

இதே வேளை ஆதரவாளர்கள் பிரதேச செலகத்தினுள் நுளைய முட்பட்ட வேளை பொலிஸாருடன் வாக்கவாதங்களில் இடுபட்டு கற்களை வீசினர். இச்சம்பவத்தினால் பொலிஸாரின் ஜீப் வண்டியின் கண்ணாடி உடைந்ததனால் இரு இளைஞர்கள் இதன் போது கைது செய்யப்பட்டதுடன் மேலதிக பொலிஸாரும், இரானுவத்தினரும் அங்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பில் ஈ:படுத்தப்பட்டிருந்தனர்.

இத்தேர்தலின் இறுதி முடிவின் படி 501 வாக்குகளைப் பெற்று உதுமாலெப்பை சபீர் அமோக வெற்றிபெற்றுள்ளதுடன், எம்.என். பர்சாத் 179 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளார்.

வெற்றி பெற்றுள்ள வேட்பாளர் உதுமாலெப்பை சபீர் கருத்து தெரிவிக்கையில்- இளைஞர்களுக்கான இத்தேர்தலை அரசியல் பின்னணியுடன் அரசியல் சாயம் பூசுவதற்கு முட்பட்ட தரப்பினரக்கு அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த பாலமுனை, ஓலுவில் மற்றும் தீகவாப்பியச் சேர்ந்த இளைஞர், யுவதிதிகள் மிக ஆர்வத்துடன் இனம், மதம், பிரதேசம் முக்கியமாக கட்சி வேறுபாடுகளை மறந்து நல்லதொரு ஆணையை வழங்கியுள்ளமை இப்பிரதேசத்தின் எதிர்காலத்திற்கும், இளைஞர், யுவதிகளின் விமோசனத்திற்கும் கால்கோலாக அமையும் என நினைக்கிறேன்.

இப்பரதேச இளைஞர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளார்கள். முக்கியமாக இக்கிராமங்களில் பிதேச, கட்சி ரீதீயான சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் வளர்த்து இளைஞகர்களை உணர்ச்சியூட்டி சுயலாப அரசியல் செய்துவருபவர்களுக்கு இது ஒரு பேரடியாக அமையும் என நான் கருதுகின்றேன். இவ்வாறான அரசியில் செயற்பாடுகளினால் பல்வேறு முக்கிய விடங்களில் நாம் இன்னும் பின்தங்கி வாழ்ந்து வருகின்றோம். குறிப்பாக இன்று இளைஞர்களே எல்லாவழிகளிலும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறான போக்குகள்,சிந்தனைகள் இன்னும் தொடரவிடக்கூடாது. இளைஞர்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு எமக்கெதிரான சவால்களையும், தடைகளையும் உடைத்தெறிந்து சிறந்தொரு எதிர்கால இளைஞர் சமூதாயத்தைக் கட்டியெழுப்பவதற்கு அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒற்றுமையாக செயல்படவோம். என்றார்.  

1 comment:

  1. அரசியல் களை முகத்திலும் கண்களிலும் அப்படியே தெரிகிறது.
    தம்பிமாரே, உங்களைப் பெற்ற தாய் தந்தையரின் அனுமதியுடன்தான் இந்தக் களத்தில் குதித்தீர்களா?
    அவர்களது கஷ்டங்களை நீங்கள் புரிந்துகொண்டுதான் வாழுகின்றீர்களா?
    இன்று 2000 ரூபா நோட்டை காலையில் மாற்றினால் மாலையில் 10 ரூபா குற்றி கூட கையில் இல்லாத அளவுக்கு விலைவாசி எகிறியிருக்கின்றது.
    சிறிய பால்மா பக்கற் முதல் பெரிய சீமெந்து பக்கற் வரை எல்லாம் விலை. மின்சாரக் கட்டணம் இரட்டிப்பாகிவிட்டது. ஒரு வீட்டுக்கு ஒருவர் உழைத்து சீவியம் நடத்துவது கர்ண கோடூரமாகி விட்டது. இந்த நிலையில் வீட்டில் தந்தைக்கு பக்கபலமாக இருப்பதை விட்டுவிட்டு இது தேவையா உங்களுக்கு?
    “ஆவ தாவதாம் அறிவல்ல வீட்டில்
    வேவ தாவதாம் அறிவு”
    என ஒரு அறிவுரை படித்த ஞாபகம் இருக்கின்றது.

    எல்லாரும் ஒதுங்கினால் அரசியல் செய்வது யாராம் என்று நீங்கள் கேட்கலாம்.
    நீங்கள் அரசியலில் கிரகப் பிரவேசம் நடாத்திய இலட்ஷணத்தை நேற்று அட்டாளைச் சேனையில் கண்டோம். “என்னே அழகான முன்மாதிரி!”
    மாலையும் கழுத்துமாக நிற்கும் உங்களைப் பார்க்கும்போது பலி கொடுக்கப்போகும் கடாவுக்கு மாலை போட்டது மாதிரி இருக்கின்றது. ஆம், நீங்கள்தான் பிரதேச அரசியல்வாதிகளின் வளர்ப்புக் கடாக்களாகிவிட்டீர்களே. நன்றாகத்தான் முட்டிக் கொள்கின்றீர்கள்.
    நமது அரசியல்வாதிகள் கெட்டகேட்டுக்கு அவர்களுக்கு நீங்கள் வாரிசுகள்!
    முதலில் பெற்று வளர்த்த வாப்பாவின் பெயர் விளங்க அவருக்கு நல்ல வாரிசாக இருக்கப்பாருங்கள்.
    “விதி யாரை விட்டது!”

    ReplyDelete

Powered by Blogger.