'ஆஸாத் சாலியை விடுதலை செய்யும் அமைப்பு' என்ற பெயரில் குழு உருவாக்கம்
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அஸாத் சாலியை விடுதலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அஸாத் சாலியை விடுதலை செய்யும் அமைப்பு என்ற பெயரில் ஒரு நடவடிக்கை குழு உருவாக்கப்பட்டுள்ளது. இன்று 04-05-2013 மாலை கொழும்பிலுள்ள அஸாத் சாலியின் அலுவலகத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் இது குறித்து அறிவிக்கப்பட்டதாக இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்ற ஜப்னா முஸ்லிம் இணையத்தின் மூத்த ஊடகவியலாளர் தெரிவிக்கின்றார்.
நவ சமசமாஜ கட்சி தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்,ஐக்கிய சோஷலிஸக் கட்சி தலைவர் சிறிதுங்க ஜயசூரிய ஆகியோரைக் கொண்ட தலைமைத்துவ சபையொன்று இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் செயலாளர் பதவி மேல் மாகாண சபையின் கொழும்பு மாவட்ட ஐ.தே.க உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அஸாத் சாலி விடுதலை தொடர்பான எல்லா நடவடிக்கைகளுக்கும் இனி இந்த அமைப்பே பொறுப்பாக இருக்கும். அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி இந்த சபை விரைவில் கூடி ஆராயவுள்ளது.

அல்ஹமதுலில்லாஹ்!
ReplyDeleteஇந்த 'ஆஸாத் சாலியை விடுதலை செய்யும் அமைப்பில்' என்னையும் ஒரு உறுப்பினராக பதிவு செய்து கொண்டுள்ளேன்.
யாழ்.முஸ்லிம் இணையதளத்தில் இந்த அமைப்பு தொடங்கப்பட்ட செய்தியைப் பார்வையிட்டவுடன் எனது விண்ணப்பத்தை அமைப்பின் செயலாளரான முஜிபுர் ரஹ்மான் அவர்களைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து விட்டேன்.
யா அழ்ழாஹ்! இலங்கை முஸ்லிம் சமூகத்திற்காக சுயநலன்களைப் பாராது குரல் கொடுத்தது வந்த எமது ஆஸாத் சாலி அவர்களை அரசின் பிடியிலிருந்து மீட்பதே எமது சமூகத்தின் உண்மையான சமூக, அரசியல் விடுதலைக்கான ஆரம்பப் படியாக இருக்கும் என நான் நம்புகின்றேன். அதை நீ கபூல் செய்வாயாக!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
oru face book page create seidu aadaravu terivippome
ReplyDeletealhamdulillah allah is great he will help us
ReplyDelete