தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்கள் ஒன்று கூடுதலும் அங்குரார்ப்பணமும
(அபூ ஆதில் + அவுதீனா)
தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு தெரிவான 2011/2012 ம் வருடத்துக்கான மாணவர்களை கல்வி நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளின் ஒருகட்டமாக பிரயோக விஞ்ஞான பீடத்தில் 2011/2012 ம் வருடத்துக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று காலை பிரயோக விஞ்ஞான பீட கூட்ட மண்டபாத்தில் இடம்பெற்றது.
2011/2012 ம் வருடத்துக்காக பௌதீக விஞ்ஞான பிரிவுக்கு 87 மாணவர்களும் உயிரியல் விஞ்ஞான பிரிவுக்கு 137 மாணவர்களுமாக மொத்தம் 224 மாணவர்கள் இணைந்து கொண்டனர்.
பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
விசேட அதிதியாக பதிவாளர் எச்.எ. சத்தார் கலந்து கொண்டதுடன் துறைத்தலைவர்களும்,விரிவுரையாளர்களும் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.




Post a Comment