பஸ்வண்டிகள் நிறுத்தப்படும் ஹோட்டல்களில் சுகாதார சீர்கேடு - பிரயாணிகள் விசனம்
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
இலங்கையில் நாலா பகாங்களிலும் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்யும் பஸ்வண்டிகள் நிறுத்தப்படும் ஹோட்டல்களில் சுகாதார சீர்கேடுகள் காணப்படுவதாக பிரயாணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மட்டக்களப்பு பொலன்னறுவை ,பொலன்னறுவை கொழும்பு,காத்தான்குடி கொழும்பு, கல்முனை கொழும்பு,அக்கறைப்பற்று கொழும்பு,திருக்கோயில் கொழும்பு,அக்கறைப்பற்று யாழ்பானம்,மட்டக்களப்பு யாழ்ப்பானம், கல்முனை யாழ்ப்பானம் ஆகிய பிரதேசங்களுக்கு செல்லும் பஸ்கள் சாப்பாட்டிற்காக அல்லது சிற்றுண்டிக்காக நிறுத்தப்படும் ஹோட்டல்களில் அதிகமாக சுகாதார சீர்கேடுகள் நிலவி வருகிறது.
இதில் நாவலடி,ஓட்டமாவடி, ஹபறன, வரக்காபொல, ஒமரகொல்ல,தங்கோவிட்ட, துல்கிரிய இனாமலுவ தம்புள்ளை உள்ளிட்ட பிரதேசங்களில் நிறுத்தப்படும் ஹோட்டல்களில் இவ்வாறான சுகாதார சீர்கேடுகள் அதிகமாக நிலவி வருகின்றது.
மலசல கூடங்களில் நீர்,மின்சார வசதியின்மை, மலசல கூடங்களில் துர் நாற்றம் , நீர் அருந்தும் கோப்பைகள்,கிளாஸ்கள் ஒழுங்காக கழுவப்படாமை,போதியளவு நீர் வசதியின்மை,சாதாரண ஹோட்டல்களை விட அதிகபட்ச விலைக்கு விற்றல் , சோட்டிஸ் உள்ளிட்ட உணவுப் பண்டங்களில் சுகாhதாரம் இன்மை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.
இது தொடர்பாக சுகாதார அமைச்சும் ,நுகர்வோர் அதிகார சபையும் அதிகம் கவனம் எடுக்க வேண்டுமெனவும்; குறிப்பாக அந்தந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மூலம் பரிசோதனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும். பிரயாணிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

islam prescribe cleanliness. can the social service organizations take up this issue with muslim hotel owners and educate them about the importance of cleanliness, inside the kitchens, wearing head cover, washing hands with soap and water very frequently, and not touching the food with bare hands. that will give the public the real image of islam.
ReplyDelete