திருமலையில் இலவசக் கல்வியும், தொழில் வழிகாட்டலும்
(ஏ.ஜே.எம் .சாலி)
திருமலை மாவட்டத்தில் க.பொ.த.(சா/த )ப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான இலவசக் கல்வியும் மற்றும் தொழில் வழிகாட்டல் நிகழ்சி திட்டம் ஒன்றை நடத்துவதற்கு இன்சைட் சென்டர் என்ற கல்வி அபிவிருத்தி நிறுவனம் முன் வந்துள்ளது. பாடசாலை ஊடாக இந்நிகழ்ச்சி திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.முஸ்லிம் கவுன்சில் ஒவ் ஸ்ரீ லங்கன்ஸ் இன் ரியாத் என்ற அமைப்புடன் இணைந்தே மேற்படி கல்வி முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வழிகாட்டல் நிகழ்ச்சிகள் பின்வரும் முறையில் அமையவுள்ளன.
௦1. மாணவர்கள் திறம்பட கற்பதற்கான ஊக்குவித்தலை வழங்குதல் .
௦2. பல்வேறுபட்ட துறைகளில் உள்ள பரந்த வாய்ப்புக்களை எடுதுக்கா ட்டுவதன் ஊடாக மாணவர்கள் அவ்வாய்ப்புக்களை தெரிவு செய்யக்கூடிய சந்தர்பங்களை ஏற்படுத்தல்.
௦3. க.பொ.த.(சா/த)ப் பரீட்சையில் சித்தியடையாத மற்றும் தொழில் துறையில் பிரவேசிக்க விரும்பும் மாணவர்கள் எத்தகைய தொழில் துறையை தெரிவு செய்தல் மற்றும் தமது பெறுபேறுகளின் அடிப்படையில் எத்தகைய தொழில்சார் பயிற்சி நெறிகளை தெரிவு செய்தல் போன்ற வழிகாட்டல்கள் வழங்குதல்.
க.பொ.த.(சா/த) தில் தோற்றிய மாணவர்களுக்கான இவ்வழிகாட்டல் நிகழ்ச்சிகளில் திருமலை பாடசாலை மானவர்கள் பங்குபற்றி பயனடையுமாறு வேண்டப்படுகின்றனர்.இந்நிறுவனம் இலவசமாக வழங்க இருக்கும் மேற்படி நிகழ்சி திட்டத்தில் பங்குபற்ற விரும்பும் பாடசாலைகள் பின்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளல் வேண்டும்.
Iisight centre for education development
18A,palmyrah Avenue,
Colombo- 03 Tel -0772649154
என நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார் .

Post a Comment