காத்தான்குடி மக்களுக்காக என்னை அர்ப்பணித்து வருகின்றேன் - ஹிஸ்புல்லாஹ்
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள சகல பள்ளவாயல் மையவாடிக்காணிகளும் அரச காணிகளாகும் அதில் யாரும் எந்தப் பள்ளி நிர்வாகமும் உரிமை கொண்டாட முடியாது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் 'சமகாலத்தில் - மக்களுடன் - பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்'எனும் தொனிப்பொருளிலான மாபெரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர்
நாங்கள் மையவாடிக்காணிகளை அத்துமீறுவதாக சிலர் கூறுகின்றனர். நாங்கள் ஒரு போதும் மைய்யவாடிக்காணிகளை எடுக்கவோ ஆக்கிரமிக்கவோ மாட்டோம் அது ஒரு போதும் இடம்பெறமாட்டாது.இடம்பெறக்கூடாது.
காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள மையவாடிக்காணிகள் எதுவும் எந்த பள்ளிவாயல்களுக்கும் சொந்தமானதல்ல. அந்த மைய்யவாடிக்காணிகள் அரசாங்க காணிகளாகும். அரசாங்க காணிகளுக்கு நகரசபையே பொறுப்பாகும்.
ஜாமியுழ்ழாபிரீன் அரச மையவாடிக்காணியில் காத்தான்குடி நகர சபையின் கட்டிடத்தை அமைத்து நகர சபையை விசாலப்படுத்தி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் திட்டமிட்டோம். ஆனால் அதற்கு பல பேர் முட்டுக்கட்டைகளாக திகழ்கின்றனர்.
அரசியலில் பிரவேசித்த நான் கடந்த 25 வருடங்களாக என்னை இந்ந ஊர் மக்களுக்காக அர்ப்பணித்து வருகின்றேன். ஆனால் எனது அபிவிருத்தி நடவடிக்கைகளை நீண்ட காலமாக எதிர்த்து வருபவர்களே இதனையும் எதிர்க்கின்றனர். எனக்கு நீங்கள் அளித்த வாக்குக்கு நான் இறைவனிடத்தில் பதில் சொல்லும் வகையில் நான் வேலை செய்ய வேண்டும்.
அந்த வகையில் இந்த ஊரில் நான் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றேன். நான் தவறிழைக்கின்றேன் அல்லது அபிவிருத்தி வேலைகளில் மோசடி செய்கின்றோம் என்று நிரூபித்தால் அரசியலிலிருந்து நான் ஒதுங்கத் தயாராகவுள்ளேன். பட்டம் பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்து செயற்படமாட்டேன்.
ஏதாவது பிரச்சினை என்றால் என்னோடு பேசுங்கள் நான் இல்லாத பட்சத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்குடன் அல்லது எனது மசூறா குழுவுடன் பேசுங்கள்.
பள்ளிவாயலில் பாங்கு சொல்லி மக்களையும் முஸ்லிம் சமூகத்தையும் தூண்டி பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்ளாதீர்கள். முஸ்லிம் சமூகத்தை நிதானத்துடன் வழி நடாத்த வேண்டிய பொறுப்பு முஸ்லிம் அரசியல் தலைவர்களாகிய எங்களுக்கு உள்ளது.
குறித்த ஜாமியுழ்ழாபிரீன் மையவாடிப் பிரச்சினை வெறுமனே தூண்டிவிடப்பட்ட ஒரு நாசகார செயலாகும் இதற்கு ஒரு போதும் அடிபணியாது நமது ஊரின் அபிவிருத்திக்காக நாம் அனைவரும் கைகோர்த்து ஒன்றாக செயற்படுவோம் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி மக்களுக்காக நீங்கள் மாத்திரம்தான அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருப்பதாக எப்படிக் கூறுவீர்கள்?
ReplyDelete1990ம் ஆண்டில் பள்ளிவாசல் படுகொலை இடம்பெற்ற பின் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்தது இந்த ஊருக்கான அர்ப்பணிப்பாகாதா?
நீங்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை என்றால் சுனாமியின் பின்னர் சம்மேளனத்திலிருந்து நீங்கள் பெற்றுக் கொண்ட பெருந்தொகைப் பணத்திற்கு வாங்கப்பட்ட காணிகளின் பட்டியலையும், குவைட் சிற்றி வீட்டுத் திட்டம் வழங்கப்பட்ட அகதிகள் பட்டியலையும் பகிரங்கமாக வெளியிடுங்கள் பார்க்கலாம்?
சுனாமி நன்கொடையாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மேற்கொண்ட "குவைட் சிற்றி வீடமைப்புத் திட்ட விசாரணை அறிக்கை"யை ஏன் அவர்கள் பல வருடங்களாக வெளியிடாமல் கிடப்பில் போட்டுள்ளனர்? உங்களின் தில்லுமுல்லுகள் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில்தானே?
மையவாடிக் காணிகள் நகர சபைக்குத்தான் சொந்தம் என்றால் முன்னைய நகர சபைக் காலத்தில் கட்டப்படவிருந்த பஸ் நிலையத்தையும் நீங்கள் இவ்வாறு தலையிட்டு கட்டுவதற்கு முயற்சித்திருக்கலாமே? ஏன் அவ்வாறு நீங்கள் முயற்சிக்கவில்லை? அப்படிக் கட்டப்பட்டால் அதில் முன்னாள் நகர முதல்வர் யூ.எல்.எம். முபீன் அவர்களின் பெயர் நினைவுப்படிகக் கல்லில் பொறிக்கப்பட்டுவிடும் என்பதனாலா?
சரி, நீங்கள் காத்தான்குடி மக்களுக்காகவே 25 வருடம் அரசியலில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறீர்கள் என்றால் இது வரை நீங்கள் நாடாளுமன்றத்தில் இந்த ஊரின் எல்லைகள் தொடர்பாகவும், ஏனைய பிரச்சினைகள் பற்றியும் பேசிய ஹான்ஸார்ட் அறிக்கைகளை பொதுமக்களுக்கு வழங்குவீர்களா?
முன்னாள் எம்.பி. மர்ஹும் பரீட் மீராலெப்பை அவர்களால் உருவாக்கப்பட்ட கர்பலா கிராமம் உங்களின் கால்நூற்றாண்டு அரசியல் உழைப்பில் இன்னமும் செழிப்படையவில்லையே..?
காங்கேயனடை பள்ளிவாசலுக்குரிய கூவாக்காட்டுக் காணியில் கட்டப்பட்ட ஈரான் குடியரசின் வீட்டுத்திட்டத்தில் எத்தனை வீடுகள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டன?
என்னைப் பொறுத்தளவில் உங்களது 25 வருட அரசியல் காலத்தில் காத்தான்குடி மக்கள் பயன்பெற்றதை விட உங்களுக்கு ஸால்ரா அடிக்கும் ஆதரவாளர்கள் நன்மையடைந்ததே அதிகம் என்பேன். இதுதொடர்பில் பகிரங்கக் கலந்துரையாடலுக்கும் நான் தயார்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
waaw fantastic
ReplyDeletewhat ever poovi rahmamullah sayers it is all true and corrected.
ReplyDeleteSo he has finished in saving himself? Aney we have believe these fellows !
ReplyDeleteUngalayppola suyanalam, piradesawasam parkinra arasiyal wadikal anaywarukkum allahwin safamundawazaha!
ReplyDelete