Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் தடம்புரண்டு போகுமேயானால், யாஅல்லாஹ் இக்கட்சியை அழித்துவிடு

 (ஏ.எல்.ஜுனைதீன்)

   சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முஸ்லிம் சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு உருவாக்கப்பட்ட கட்சி, இக்கட்சி தனது இலட்சியப் பாதையிலிருந்து தடம் புரண்டு போகுமேயானால், மறைந்த மாமேதை எம்.எச்.எம் அக்ஷ்ரப் சொன்னார். இக்கட்சியை அழித்துவிடு யா அல்லாஹ் அது நிச்சயம் நடக்கும் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவருமான கே.எம்.ஏ றஸ்ஸாக் (ஜவாத்) தெரிவித்தார்.

   கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா அருகில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றில் அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

   கல்முனை மாநகர சபை மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமை வகித்த இவ்வைபவத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.

   முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றஸ்ஸாக் இங்கு தொடர்ந்து பேசுகையில் மேலும் கூறியதாவது,

இக்கட்சி தொடர்பாக இன்னும் ஒன்றையும் மாமனிதர் கூறினார். ஒரு கட்டத்தில் இளைஞர்கள் ஏந்தும் துப்பாக்கிகள் தலைவர்களை நோக்கி குறி திரும்பும் என்றார் அது நடக்கும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் 1986 ஆம் ஆண்டுகளில் எங்கள்  உடல், பொருள், ஆவி என்பனவற்றை அர்ப்பனித்து இக்கட்சியை ஆரம்பித்தவர்கள் நாங்கள். 

இக்கட்சிக்குள் யாரும் வரட்டும் போகட்டும் அவர்கள் எதையும் கூறட்டும் கூறாமலும் விடட்டும், கட்சிக்குள் நடிக்கட்டும் நடிக்காமலும் விடட்டும் ஒரு அபிவிருத்தியை செய்ட்டும் செய்யாமலும் விடட்டும் அதைப் பற்றி எல்லாம்  எங்களுக்கு எதுவித கவலையும் இல்லை ஆனால், கட்சி தொடர்பாகவும் எங்களுக்கு எதிராகவும் தேவையற்ற வசனங்களைப் போட்டு அறிக்கைகள் விடும்போது எதிர்த்துப் பேசுகின்ற, எழுதுகின்ற வல்லமை எங்களுக்கு இருக்கின்றது. அதனை செய்தே தீருவேன்  இது தொடர்பாக எந்தத் தலைவன் எதிர்த்தாலும் கேட்கப்போவதில்லை.

   இக்கட்சியை வழி நடத்துபவன் எம்மையெல்லாம் படைத்த அல்லாஹ். அவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். இக்கட்சியிலுள்ள பிரள்வுகளை அவன் சகித்துக் கொண்டிருக்கின்றான். சரியான இடத்தில் சரியான நேரத்தில் சரியாகத் திருத்துவான் இல்லையேல் அல்லது பூண்டோடு அழிப்பான். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் பிரமுகர்களாகிய நாங்கள் இப்படி மேடையில் ஒன்றாக அமர்ந்து இருக்கும் போது புஸ் என்று பறப்போம். இது நடக்கும் இது சாதாரணமாக உருவாக்கப்பட்ட கட்சியல்ல. இரத்தங்களால் உருவாக்கப்பட்ட கட்சி. இக்கட்சியை தமது சுகத்திற்காக சுய நலத்திற்காகப் பாவிப்பவர்கள் அழிக்கப்படுவார்கள். அசிங்கப்படுத்தப் படுவார்கள். இது நிச்சயமாக நடந்தே தீரும்.

இன்று இவ்விடத்தில் முழக்கம் அப்துல் மஜீத் இல்லையே என்ற ஏக்கம் எனக்கு இருக்கின்றது. இக்கட்சிக்கு முதன்முதலாக உயிர்களைத் தருபவர்கள் யாராவது இருக்கின்றீர்களா என்று மறைந்த மர்ஹும் அஷ்ரப்  முதலாவதாக நடைபெற்ற வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கேட்டபோது நானிருக்கின்றேன் என முதலாவதாக எழும்பிய ஒரு இளைஞன் அவர். தற்போதும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவராக கட்சித் தலைவரால் அழகான மகுடம் சூட்டப்பட்டிருக்கிறார்.அவர் இந்த இடத்திற்கு அழைக்கப்படவில்லை. மறைந்த தலைவர் இருந்திருந்தால் தனது வாகனத்தை அனுப்பி அழைப்பித்திருப்பார். யாரும் என்னை அழைக்கவில்லையே அழைக்காமல் எப்படிச் செல்ல்லாம் என வேதனைப்பட்டார்.

   முஸ்லிம் காங்கிரஸில் தற்போதுள்ள தலைவர்களுக்கு எம்மைப் படைத்து பரிபாலிக்கின்ற அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இல்லை அவனின் நாட்டப்படிதான் நடக்கும் என்றார்.

5 comments:

  1. SLMC leaders have faith and fear on Rajapaksa not on Allah. They bother about their position and personal benefits.
    How can you expect their service for Muslims?

    ReplyDelete
  2. முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பெரிசு உங்களுக்கு ஆனால் எங்களுக்கு இஸ்லாம் மார்க்கம் பெரிசு உங்களுக்கு மர்ஹூம் அஷ்ரப் பெரிசு ஆனால் எங்களுக்கு நபி ஸல் பெரிசு -இதை நான் சொல்லவில்லை எல்லா முஸ்லிம்களும் சொல்லுகிறார்கள்

    ReplyDelete
  3. Dear Brother your statement, I hope will refresh the current members of CMC. If not Allah is enough for them.

    But just one thing in your speech " Who will die for this CMC ?" asked by former leader, does not sound good for a Muslim. Rather that statement should have been " Who will die for the sake of Allah in this CMC?

    Allah knows best.

    ReplyDelete
  4. Mr. Jawad Nienkalum Antha kachchiel Erunthu Kondu Solumpothuthan Enkalukku Veathanai -Munnal Thalaiverukku Aduthappol Unkakalukku Mathippum Mathiyarium Kodutham Athu Nienkal Ariveerkal. Thatpothu Nienkal Muslim Makkalai Veetrupeelaippu Nadathum Arasiyal Veevchsarykaludan Payanikkum Pothu Unkalai Veeddu Othunkeenoam Thatpothaya Suolalil kachchy Kappathavandiy Poruppu Unkalaipondra Thiyakeekal, Majeed Udpada poradavandum
    Thadpoathu 100% Muslimkalukku Pirachchani Erukkum Pothu Peasatha SLMC Thalaivar Ethukku Peeraku Pasuvara............................................?
    Kachchai Alikkaveandum Enru Allahveedam Kaddathu Pielai
    Nienkal Keakkaveandum Ya Allah Intha Muslimkalukku Uthavatha Arasiyal Thalaimai Peedathai Aalithuveedu Yaa Allah -Aameen Aameen Yaarpal Alameen
    (Evan Ourvan Aniyaya Aachchik Karanukku Thunai Poakienrano Avan Islathil Erunthu Veelakie Veeddan Al-Hathis Thaprany)
    ================Kalmunai Mohamed Fowse===================

    ReplyDelete
  5. Unkalin kevalam kedda suya lafankalukkaha allahvayum markkathayum thunaikku alaikkamal virumpyapady nadanthu kondu poankal unkal anaiththu thalaivarhal thondarhal anaivarukkum marumayil visaranai undu

    ReplyDelete

Powered by Blogger.