Header Ads



கிரிக்கெட் சூதாட்டத்துடன் கிறிஸ் கெய்லுக்கு தொடர்பா..?

சூதாட்ட சர்ச்சையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் பிடிபடுவார் என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் "பிக்சிங்' செய்த ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோருடன் ரஞ்சி கோப்பை வீரர்கள், பல்வேறு புக்கிகள் டில்லி போலீசிடம் பிடிபட்டனர். தவிர, சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த குருநாத் மெய்யப்பனும், இதில் சிக்கியுள்ளார். 

சமீபத்திய விசாரணையில் 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட நான்கு வீரர்களின் பெயரை, டில்லி போலீசிடம் ஸ்ரீசாந்த் தெரிவித்திருந்தார். இதில் ஒருவர் கெய்லாக இருக்கலாம் என்று இப்போது தெரியவந்துள்ளது. 

பெங்களூரு அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல், ஸ்ரீசாந்த் இணைந்து சமீபத்தில் ஜெய்ப்பூரில் உள்ள புக்கிகள் பவான், சஞ்சய் சகோதரர்களுடைய மோதி சன்ஸ் என்ற நகைக்கடைக்கு சென்றுள்ளனர். இங்கு ரூ. 4 முதல் 5 லட்சம் மதிப்புள்ள நகைகளை கெய்ல் வாங்கியுள்ளனர். 

இந்த நகைக்கான பணத்தை ஸ்ரீசாந்த்தின் உறவினரும், தற்போது போலீஸ் பிடியில் உள்ள ஜிஜூ ஜனார்தன் என்ற பிஜூ தான் செட்டில் செய்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் போலீசிடம் சிக்கியுள்ளன. சூதாட்ட விவகாரம் வெளிவரத்துவங்கியது முதல் பவான், சஞ்சய் சகோதரர்கள் தலைமறைவாகி விட்டனர். 

குருநாத்துக்கு தொடர்பு:

ஜெய்ப்பூரை சேர்ந்த பவான், சஞ்சய் சகோதரர்களுக்கு குருநாத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்காக வின்டூ, ஐந்து நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து கொடுத்தார். 

அன்றைய தினம் குருநாத்திடம் 25 முறை போனில் பேசினராம். இந்த புக்கிகளுக்கு "குரு' என்று தான் தெரியும். தவிர, கோத்தாரி என்ற புக்கியின் வங்கிக்கணக்கில், குரு பணம் செலுத்தியுள்ளார்.

இதனால், "பிக்சிங்கில்' விவகாரத்தில் கெய்ல் பிடிபடுவார் எனத் தெரிகிறது. 

No comments

Powered by Blogger.