Header Ads



மட்டக்களப்பு மாவட்டத்தின் பொறுவாய்ந்த அதிகாரிகளே...!



(எம்.ரீ.எம்.பாரிஸ்)

கிழக்கின் நுழைவாயிலாகக் கருதப்படும் மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலம்  பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த போது 1922ம்  ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இரும்பு பாலமாகும்.இது மாதுறு ஓயா ஆற்றின் கிளையின் மேலாக அமைக்கப்பட்டுள்ளது. 

50 வருட உத்தரவாதம் வழங்கப்பட்டு பாவனையிலிருந்த இப்பாலம் புகையிரத பாதை,தரைவழிப்போக்குவரத்து எனப் பாவனைக்குட்படுத்தப்பட்டமையால் 90 களின் பின்பு இப் பாலம் மிகுந்த சேதத்துக்குட்பட்டுக் காணப்பட்டது. 

அத்தோடு தேசிய கடதாசி தொழிற்சாலை,விவசாயப் பெரு நிலங்கள் கால் நடைப் பண்ணைகள் மட்டு-கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து என இப்பாலத்தின் பயன்பாடுகள் ஏராளமாக காணப்பட்டது. இவ் வாறு இருக்கும் நிலையில் இப் பாலம்  மிகுந்த சேதமுற்றதனால் பொது மக்கள் அச்சத்துடன் பாவனைக்குட்படுத்தி வந்தனர். 

இதனையிட்டு அன்றைய மட்டு மாவட்டத்தின்  அனர்ந்த நிவாரண சேவைகள் அமைச்சராக இருத்த எம்.எஸ்.எஸ்.அமீர் அலி  முனைப்புடன் கருமமாற்றியதன் பயனாக கடந்த 2007 நவம்பர் 17ந் திகதி இப் பாலத்துக்கு சமாந்திரமாக புதிய பாலத்தை தனியே தரைவழிக்கென நிர்மாணிக்க அடிக்கல் நடப்பட்டது. புதிய பாலம் ஸ்பையின் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 770மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது.

இதற்கமைவாக இப்பாலம் மட்டு-கொழும்பு பிரதான வீதியும் இரு வழிப்பாதையாக கார்ப்பற் இடப்பட்டு மெருகூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது 250 மீற்றர் நீளத்தையும் 10.5 மீற்றர் அகலத்தையும் கொண்டுள்ள புதிய இரும்பு பாலம் தனியே தரைவழி போக்குவரத்துக்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கடந்த 19.03.2010 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இந் நிலையில் பழைய பாலம் தனியே புகையிரதப்போக்குவரத்துக்காக பாவிக்கப்பட்டு வருகின்றபோதிலும் இன்று இப் பழைய பாலத்தின் நிலை மக்களை அச்சுறுத்தும் வகையில் கடுமையாக பாதிக்கப்பட்டு காணப்படுகின்றது. இதனை புணர்நிர்மானம் செய்யவேன்டிய அவசியம் முள்ளது ஏன் என்றால் இற்றைக்கு இப்பாலத்தின் வயது 91 ஆகும் மிகவும் பழைமை வாய்ந்த இப்பாலமானது ஒரு தேசிய சொத்தாகும் இதனை பராமறிப்பதும் பாதுகாப்பதும் பொறுப்பு வாய்ந்த அதிகரிகளின் கடமையல்லவா..?



No comments

Powered by Blogger.